ARTICLE AD BOX
Secondhand Car வாங்குற பிளான் இருக்கா? இந்த வங்கிகள்ல எல்லாம் இதுக்கு கடன் கிடைக்கும்..
இந்தியாவில் தற்போது Secondhand கார்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே வந்துள்ளது. முதல் முறையாக கார் ஓட்ட கற்றுக்கொண்டு கார் வாங்குபவர்கள் சில ஆண்டுகளுக்கு Secondhand கார்களை வாங்கி பயன்படுத்திவிட்டு பின்னர் புது கார் வாங்கலாம் என எண்ணுகின்றனர்.
அந்த வகையில் தற்போது இவ்வாறு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்வதற்கென்றே பல்வேறு நிறுவனங்களும் வந்துவிட்டன. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும் போது நமக்கு வங்கி கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ஆனால் இந்தியாவில் பல்வேறு வங்கிகளும், வங்கி சாராத நிதி நிறுவனங்களும் Used car loans என்ற பெயரில் கடன் வழங்குகின்றன.

தகுதிகள் என்னென்ன?
இவ்வாறு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க வாகன கடனுக்காக விண்ணப்பம் செய்யும்போது , அவர்களின் வயது 21 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்
அவர்களுக்கென நிலையான வருமானம் இருக்க வேண்டும்
கிரெடிட் ஸ்கோர் 675 க்கு மேல் இருப்பது அவசியம்
ஊதியத்திற்காக வேலைக்கு செல்லும் நபர்களும், சுய தொழில் செய்வோரும் கூட இத்தகைய கடன்களை வாங்க முடியும்
எப்படி விண்ணப்பம் செய்வது?
வங்கிகளும் , வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்கு கடன்களை வழங்குகின்றன
முதலில் எந்தெந்த வங்கிகள் எந்தெந்த நிறுவனங்கள் இது போன்ற கடன்களை வழங்குகின்றன என்பதை பட்டியலிட்டு கொள்ள வேண்டும்
இதனை அடுத்து எவ்வளவு வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறார்கள் இதற்காக அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் என்னென்ன என்பதை ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்
கடன் வழங்கும் நிறுவனங்கள் விதிக்கும் அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
நீங்கள் இந்த குறிப்பிட்ட வங்கிக்கோ அல்லது அவர்களின் டிஜிட்டல் செய்திகள் வாயிலாகவோ விண்ணப்பம் செய்யலாம்
அடையாள ஆவணம் , வருமானத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் குடியிருப்புச் சான்று, நீங்கள் வாங்கப் போகும் வாகனம் தொடர்பான விவரங்களை கேட்பார்கள்
சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்
குறிப்பிட்ட அந்த கடன் வழங்கும் நிறுவனம் தகவல்கள் அனைத்தையும் சரி பார்த்துவிட்டு உங்களுக்கு கடன் வழங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்
பொதுவாக நீங்கள் இதனை 12 மாதத்தில் இருந்து 84 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் வசதி வழங்கப்படும்
இந்தியாவில் பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ வங்கி, டாடா கேப்பிட்டல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மகேந்திரா பைனான்ஸ் , ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் , வங்கி சாராத நிதி நிறுவனங்களும் கடன்களை வழங்குகின்றன. சராசரியாக 9 சதவீதத்திலிருந்து வட்டி விகிதங்கள் தொடங்குகின்றன.
Story written by: Devika