SBI வங்கியில் வேலை.. 80 ஆயிரம் வரை சம்பளம்.. உடனே அப்ளிகேஷனை போடுங்க..!!

2 days ago
ARTICLE AD BOX

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் Concurrent Auditor பிரிவில் 1,194 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணி அனுபவம் : எஸ்பிஐ மற்றும் அதன் இணை வங்கிகளில் கிரெடிட், ஆடிட், forex பின்னணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

சம்பளம் : MMGS III -ல் ஓய்வு பெற்றவர்களுக்கு – மாதம் ரூ.45,000, SMGS -IV ல் ஓய்வு பெற்றவர்களுக்கு – ரூ.50,000, SMGS-V ஓய்வு பெற்றவர்களுக்கு – மாதம் ரூ.65,000, TEGS – VI ஓய்வு பெற்றவர்களுக்கு – ரூ.80,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை : https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

தேர்வு முறை : இதற்கு எழுத்து தேர்வு கிடையாது. 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் நேர்முக தேர்வு உண்டு.

பணி இடங்கள்: சென்னை, அகமதாபாத், அமராவதி, பெங்களூர், போபால், புவனே்வர், சண்டிகர், கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மகாராஷ்டிரா, மும்பை மெட்ரோ, டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். சென்னையில் மட்டும் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more : லீப் இயர்.. பிப்ரவரி 29 அன்று பிறந்த பிரபலங்கள் யார் தெரியுமா?

The post SBI வங்கியில் வேலை.. 80 ஆயிரம் வரை சம்பளம்.. உடனே அப்ளிகேஷனை போடுங்க..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article