ARTICLE AD BOX
SBI, இந்தியன் பேங்க் வாடிக்கையாளர்களே! 8.05% வட்டியுடன் ஸ்பெஷல் FD.. மார்ச் 31 தான் லாஸ்ட் டேட்!
எத்தனையோ முதலீட்டு திட்டங்கள் வந்தாலும், பழமைவாத முதலீட்டாளர்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தான் முதலில் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கேற்ப சில வங்கிகள் குறுகிய காலங்களில் அதிக வட்டி விகிதங்களுடன் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. பாரம்பரிய FD திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஸ்பெஷல் FD திட்டங்கள் டெபாசிட் செய்பவர்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் அளிக்கின்றன.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, சமீபத்தில் வட்டி விகிதங்களை குறைத்தது. FD திட்டங்களுக்கு வழங்கப்பட்டு விகிதங்கள் பொதுவாக ஆர்பிஐயின் பணவியல் கொள்கையை பின்பற்றி வழங்கப்படுகிறது. ஒருவேளை வட்டி விகிதங்களில் குறைவு ஏற்பட்டால் FD வட்டி விகிதங்களும் குறையலாம். எனவே சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களின் காலக்கெடு முடிவதற்கு முன்பு முதலீட்டாளர்கள் சிறந்த வருமானம் பெற விரும்பினால் இந்த திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

அதிக வட்டி விகிதங்களில் FD-களை வழங்கும் சில முன்னணி வங்கிகள் குறித்து பார்ப்போம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) - அம்ரித் விருஷ்டி & அம்ரித் கலாஷ்
இந்தியன் பேங்க் - IND சுப்ரீம் 300 டேஸ் & IND சூப்பர் 400 டேஸ்
IDBI பேங்க் - உத்சவ் காலபில் FD
மேலே கூறப்பட்டுள்ள 3 ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட்களுக்கான காலக்கெடு 2025-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதியாகும்.
SBI அம்ரித் விருஷ்டி: 444 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் அம்ரித் விருஷ்டி திட்டத்திற்கு 7.25 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்திற்கு 7.75 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும். தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி பலனடையலாம்.
SBI அம்ரித் கலாஷ்: 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் அம்ரித் கலாஷ் திட்டத்திற்கு 7.10 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்திற்கு 7.60 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும்.
ஐடிபிஐ பேங்க்: உத்சவ் காலபில் FD என்பது ஒரு ஸ்பெஷல் FD திட்டமாகும். இதன் வட்டி விகிதம் முதிர்வு காலத்தைப் பொருத்து மாறுபடும். FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 2025-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதியாகும்.
ஐடிபிஐ பேங்க்-இன் 300 நாட்கள் கால அவகாசம் கொண்ட உத்சவ் காலபில் FD திட்டம் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீத வட்டி வழங்குகிறது.
ஐடிபிஐ பேங்க்-இன் 375 நாட்கள் கால அவகாசம் கொண்ட உத்சவ் காலபில் FD திட்டம் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி வழங்குகிறது.
444 நாட்கள் கால அவகாசம் கொண்ட உத்சவ் காலபில் FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.35%, மூத்த குடிமக்களுக்கு 7.85 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
555 நாட்கள் கால அவகாசம் கொண்ட உத்சவ் காலபில் FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.40%, மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
700 நாட்கள் கால அவகாசம் கொண்ட உத்சவ் காலபில் FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.20%, மூத்த குடிமக்களுக்கு 7.70 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
இந்தியன் பேங்க்: IND சுப்ரீம் 300 டேஸ் & IND சூப்பர் 400 டேஸ் போன்ற ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. IND சுப்ரீம் 300 டேஸ் என்ற FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
IND சூப்பர் 400 டேஸ் என்ற FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.30%, மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.