மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சஞ்சு சாம்சனும் எம்.எஸ். தோனியும் ஒன்றாக ஒரே மேடையில் கலந்துக்கொண்டு உரையாடினார்

எம்எஸ் தோனி குறித்து சஞ்சு சாம்சன்:

ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. கடந்த சீசனிலிருந்து ஒரு வீரராக மட்டுமே விளையாடும் எம்.எஸ். தோனியின் கடைசி சீசனாக இருக்க வாய்ப்புள்ளது. தோனியும் சில நாட்களில் சென்னையில் தனது பயிற்சியைத் தொடங்கவுள்ளார். இந்த நிலையில் நேற்று (19.02.25), மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் கலந்துக்கொணடனர்.

ஐபிஎல்லின் முதல் சீசனில் இருந்து எம்எஸ் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அவரது தலைமையின் கீழ், சென்னை அணியை 5 முறை சாம்பியனாக்கியுள்ளார். 2022 ஆம் ஆண்டு அணியின் தலைமைப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால், மோசமான ஜடேஜாவின் செயல்பாட்டிற்குப் பிறகு, தோனி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2024 க்கு முன்பு, தோனி மீண்டும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 3-4 சீசன்களாக தோனி ஓய்வு பெறுவார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

என் குருநாதர்:

சஞ்சு சாம்சன், "நான் என் குருநாதரிடமிருந்து (எம்.எஸ். தோனி) கற்றுக்கொள்ள வேண்டும். மஹி பாய் ஐபிஎல்லில் விளையாட வரும்போது, அவர் ஓய்வு பெறுவாரா என்று மக்கள் பேசுகிறார்கள்? இப்போது இல்லை, அவர் இன்னும் கொஞ்சம் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார் சாம்சன்.

SANJU 🤝 DHONI...!!!!!

- Sanju said "Whenever people say that Dhoni should retire from the IPL, I always feel 'Thoda Aur' for Dhoni". [PTI]

A Fanboy moment by Samson 🤍 pic.twitter.com/nI8GKa7tV7

— Johns. (@CricCrazyJohns) February 19, 2025

தோனியின் ஓய்வு முடிவைப் பொறுத்தவரை, அவரது வயது மற்றும் உடற்தகுதி மட்டுமே அவரது ஐபிஎல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய இரண்டு விஷயங்கள். தோனி கடந்த சில ஆண்டுகளாக முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு 2023 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: Ind vs Ban weather report : மழை வருமா வராதா? இந்தியா vs வங்கதேசம்! ஷாக் கொடுத்த வானிலை அறிக்கை

கடந்த சில சீசன்களாக, தோனி மிகக் குறைந்த பந்துகளை மட்டுமே சந்தித்து விளையாடி வருகிறார், இருப்பினும், இந்த நேரத்தில்தான் ரசிகர்களின் உற்சாகம் அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் தோனி 130 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார்.