ARTICLE AD BOX
SALE பிச்சிக்கும்.. ரூ.12,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. BYBASS சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
வெறும் ரூ.12,000 பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 45W பைபாஸ் சார்ஜிங், 50 எம்பி கேமரா, IP66, IP68 மற்றும் IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் ரியல்மி நியோ7எக்ஸ் (Realme Neo7x) போன் களமிறங்க இருக்கிறது. இப்போது, அதிகாரப்பூர்வமாக பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த ரியல்மி நியோ7எக்ஸ் போன் எப்போது வெளியாகிறது? பீச்சர்கள் எப்படி இருக்கும்? எந்த விலையில் எதிர்பார்க்கலாம்? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி 25ஆம் தேதி இந்த ரியல்மி நியோ7எக்ஸ் போன் வெளியாகிறது. இதனால், சிப்செட், பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டன்ட் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்களையும், மார்கெட்டில் ஏற்கனவே கசிந்த முழு பீச்சர்களையும் பார்க்கலாம். அதேபோல பட்ஜெட் விவரங்களையும் இங்கே கொடுத்துள்ளோம். முதலில் சீனாவில் வெளியாகிறது. பிறகு இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

ரியல்மி நியோ7எக்ஸ் அம்சங்கள் (Realme Neo7x Specifications): இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Octa Core 4nm Snapdragon 6 Gen 4) சிப்செட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 7.97 மிமீ ஸ்லிம் பாடி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் நினைக்காதபடி IP66, IP68 மற்றும் IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.
மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், இந்த ரியல்மி நியோ7எக்ஸ் போனில் 6.67 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6 (realme UI 6) கிடைக்கிறது.
மேலும், அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா உள்ளது.
இந்த ரியல்மி நியோ7எக்ஸ் போனில் 16 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் வர இருக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இந்த ரியல்மி நியோ7எக்ஸ் இருக்கப்போகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது.
ரூ.12,000 பட்ஜெட்டில் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 25ஆம் தேதி சீனாவில் வெளியாக இருக்கிறது. அங்கு விற்பனை தொடங்கிய பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எதிர்பார்க்கலாம். இந்த ரியல்மி நியோ7எக்ஸ் போனுடன் ரியல்மி நியோ9 எஸ்இ (realme Neo7 SE) போனும் சீன மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது.
இந்த ரியல்மி நியோ9 எஸ்இ போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் மெயின் கேமரா மற்றும் செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த போனின் விலை ரூ.22,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது.