SALE பிச்சிக்குது.. OnePlus ஆஃபரில் ரூ.21,998-க்கு 100W சார்ஜிங்.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

4 hours ago
ARTICLE AD BOX

SALE பிச்சிக்குது.. OnePlus ஆஃபரில் ரூ.21,998-க்கு 100W சார்ஜிங்.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

Mobile
oi-Harihara Sudhan
| Published: Tuesday, March 4, 2025, 15:51 [IST]

அமேசான் தளத்தில் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் விலைக்கு ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4) மாடல்கள் கிடைக்கின்றன. ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையில் (OnePlus Red Rush Days Sale) இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ரூ.5,001 டிஸ்கவுண்ட்டில் ஒன்பிளஸ் நோர்ட் 4 கிடைக்கிறது. அதேபோல ஒன்பிளஸ் நோர்ட்சிஇ4 மாடலையும் ரூ.3,001 டிஸ்கவுண்ட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இவற்றின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள், விலை (OnePlus Nord 4 Specifications Price): இந்த நோர்ட் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14) மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. 6.74 இன்ச் பிளாட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

SALE பிச்சிக்குது.. OnePlus ஆஃபரில் ரூ.21,998-க்கு 100W சார்ஜிங் போன்!

50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்355) சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera System) கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா (சாம்சங் எஸ்5கே3பி9 சென்சார்) கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போனில் 5500mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் நடக்கும் ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையில் ரூ.1,001 விலை குறைப்பில் ரூ.28,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இப்போது வெறும் ரூ.24,998 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

SALE பிச்சிக்குது.. OnePlus ஆஃபரில் ரூ.21,998-க்கு 100W சார்ஜிங் போன்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள், விலை (OnePlus Nord CE4 Specifications Price): இந்த நோர்ட் போனிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 கிடைக்கிறது. ஆனால், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. 6.7 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே மற்றும் 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார்) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இதில் பிரீமியம் சென்சார்கள் இருக்கிறது. இந்த பட்ஜெட் மாடலிலும் 5500mAh பேட்டரி மட்டுமல்லாமல், முந்தைய மாடலை போல 100W சார்ஜிங் கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இப்போது ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையில் ரூ.1,001 விலை குறைப்பு போக ரூ.23,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் கூடுதலாக ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.21,998 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

இந்த ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையானது மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரையில் நடக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யலாம். இதேபோல ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர், ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12ஆர் போன்ற மாடல்களுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் பெறலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
OnePlus Nord 4 OnePlus Nord CE4 Gets Discount in Red Rush Day Sale From March 4 Specifications Price
Read Entire Article