ARTICLE AD BOX
தமிழ் சினிமா இன்று வாரங்களில் கணக்கிடப்படுகிறது. ஆனால், 90களிலும், அதற்கு முன்பும், ஆண்டுக் கணக்கில் கணக்கில் கணக்கிடப்பட்டது தமிழ் சினிமாவின் சாதனை. வெற்றி விழா, வெள்ளி விழா, பவள விழா என பல விழாக்களை கொண்டாடும் படங்கள் தான், சூப்பர், டூப்பர் ஹிட் லிஸ்டில் சேரும். அப்படி தமிழ் சினிமாவில் அதிகம் தியேட்டரில் ஓடிய திரைப்படங்களின் விபரங்களை காணலாம்.
1.ஹரிதாஸ்
ஹரிதாஸ் - 1944ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், பி. வி. ரங்காச்சாரி, டி. ஆர். ராஜகுமாரி, என். சி. வசந்தகோகிலம், டி. ஏ. மதுரம், ஹரிணி, ராதாபாய் ஆகியோர் நடித்துள்ளனர்
2.சந்திரமுகி:
சந்திரமுகி - 2005ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த் நடித்த இந்த திரைப்படம் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் ஓடியது. பி.வாசு இயக்கத்தில், வித்தியாசகர் இசையமைத்த இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
3.வசந்தமாளிகை:
வசந்த மாளிகை - 1971ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசன் நடித்த இந்த திரைப்படம் 750 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. காதல் காவியமான இத்திரைப்படத்தில் சிறந்த பாடல்களும், சிவாஜியின் தனித்துவமான நடிப்பும் மிகப்பெரிய வெற்றியை தந்தது
4.பயணங்கள் முடிவதில்லை:
பயணங்கள் முடிவதில்லை - 1982ஆம் ஆண்டு வெளியான மோகன் நடித்த இந்த திரைப்படம் 565 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மோகன், பூர்ணிமா ஜெயராம், பூர்ணம் விஸ்வநாதன், ராஜேஷ், எஸ்.வி. சேகர், டி.கே.எஸ். சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்
5: கரகாட்டக்காரன்:
கரகாட்டக்காரன் - 1989ஆம் ஆண்டு வெளியான ராமராஜன் நடித்த இந்த திரைப்படம் 425 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. கங்கை அமரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதே போல, மேலும் சில படங்களும் தியேட்டர்களில் நிறைய நாட்கள் ஓடி, வசூல் வேட்டையை குவித்த திரைப்படங்களின் பட்டியலில் உள்ளன. இருப்பினும், இந்த வரிசையில் இருக்கும் படங்களின் சாதனையை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

டாபிக்ஸ்