
பிப்ரவரி 23, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டியில், ஒன்பதாவது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உபி வாரியர்ஸ் பெண்கள் கிரிக்கெட் அணி மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை (24 பிப். 2025) அன்று நடக்கிறது. பெங்களூர் எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், இரவு 07:30 மணிக்கு ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பங்கேரும் ஆர்சிபி - உபி வாரியர்ஸ் பெண்கள் அணி மோதுகிறது என்பதால், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும், நேற்றைய டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி அடைந்து முதல் வெற்றியை உறுதி செய்த உபி வாரியஸ் அணியும் களம்காண்கிறது. இதனால் ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முந்தைய ஆட்டத்தில் மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியும் தனது முதல் தோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. IND Vs PAK Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்.. முந்தையை போட்டியில் டாப் யார்?
உபி வாரியர்ஸ் பெண்கள் அணி (UP Warriorz WPL 2025):
உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's WPL Squad 2025) அணியில் ஆருஷி ஜோயல், கிரண் நவ்கிரெ, ஸ்வேதா செஹ்ராவாத், விர்ந்தா தினேஷ், சமாரி அதப்பத்து, சினலே ஹென்றி, கிரேஸ் ஹாரிஸ், பூனம் கெம்னர், தஹியா மேக்ராத், உமா சேத்ரி, அஞ்சலி சர்வானி, கெளஹர் சுல்தானா, கிராந்தி காட், ராஜேஸ்வரி கெய்க்வாட், சல்மா தாகோர், சோபி எஸ்லேஸ்டோன், அலனா கிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை கேப்டனாக தீப்தி ஷர்மா (Deepti Sharma) வழிநடத்துகிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணியில் (Royal Challengers Bangalore Women's WPL Squad) தானி ஹோட்ஜ், சபினேனி மேக்னா, ஸ்மித்ரி மந்தனா, சார்லி டீன், எலிஸ் பேரி, ஜியார்ஜ் கிரகம், கனிகா அனுஜா, ராகவி பிஸ்ட், நுசத் பிரவீன், ரிச்சா கோஷ், ஜக்ரவி பவார், ஜோசிதா, ரேனுகா சிங், சினேக ராணா, ஆஷா சோபனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை (Royal Challengers Bangalore Women's Team Captain) கேப்டனாக ஸ்மித்ரி மந்தனா (Smriti Mandhana) கேப்டனாக வழிநடத்துகிறார்.