RCB Unbox 2025: நாளை ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வு! எத்தனை மணிக்கு? எப்படி பாக்குறது?யாரு வர்றாங்க?

16 hours ago
ARTICLE AD BOX

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டர்ன் மைதானத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் அதிகளவு ரசிகர்கள் கொண்ட அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்றாகும்.

ஆர்சிபி அணி ஒவ்வொரு சீசனின்போதும் தங்களது அணிக்காக புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது வழக்கம் ஆகும். இதற்காகவே ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.

ஆர்சிபி அன்பாக்ஸ் 2025 எப்போது?

நடப்பாண்டிற்கான ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வு வரும் நாளை (மார்ச் 17ம் தேதி) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. நாளை மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

ஆர்சிபி அன்பாக்ஸில் பங்கேற்கும் பிரபலங்கள் யார்?

ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்ச்சியில் ஆர்சிபி அணியின் வீரர்கள், நிர்வாகம் மட்டுமின்றி பிரபலங்களும் பங்கேற்கின்றனர். ஆஸ்திரேலியாவின் பிரபல டிஜே, உலகின் பிரபலமான டிஜே-வுமான டிஜே மேக், டிம்மி ட்ரம்பெட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும், பிரபல கன்னட பின்னணி பாடகியான சஞ்சித் ஹெக்டே,  ஐஸ்வர்யா ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஹனுமன்கைண்ட், ஆல் ஓகே, டிஜே சேத்தன், எம்ஜே ராகேஷ் ஆகியோருடன் சவாரி பாண்ட், பெஸ்ட் கீப்ட் சிக்ரெட் இசைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

ஆர்சிபி வீரர்கள் யார்? யார் பங்கேற்பு?

இந்த நிகழ்ச்சியில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, புதிய கேப்டன் படிதார், பில் சால்ட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லிவிங்ஸ்டன், ஷெபர்ட், நுவன் துஷாரா, ஜிதேஷ் சர்மா, யஷ் தயாள், ரஷிக்தர், ஜேக்கப் பெத்தேல், படிக்கல் மற்றும் அனைத்து ஆர்சிபி வீரர்களும், அணி நிர்வாகமும் பங்கேற்கின்றனர்.

எப்படி பார்ப்பது?

ஆர்சிபி அணியின் இந்த அன்பாக்ஸ் நிகழ்ச்சியை நேரலையில் ஆர்சிபி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://royalchallengers.com/videos/event/rcb-unbox-live-ல் காணலாம். இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காண்பதற்கு ரசிகர்கள் 99 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு 6382750580 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

18வது சீசனில் களமிறங்கும் ஆர்சிபி அணி முதன்முறையாக கோப்பையை இந்த முறையாவது வெல்லுமா? என்று அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் உள்ளனர்.

ஆர்சிபி அணி தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது.  இந்த முறை ஆர்சிபி அணி புதிய கேப்டன் ரஜத் படிதார், புதிய ஆலோசகர் தினேஷ் கார்த்திக் என பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது.

பலத்த சவால்:

5 முறை சாம்பியன்களான சென்னை, மும்பை அணிகள், முன்னாள் சாம்பியன்கள் ஹைதரபாத், ராஜஸ்தான், குஜராத், நடப்பு சாம்பியன் கொல்கத்தா, முதன்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றத் துடிக்கும் டெல்லி, பஞ்சாப், லக்னோ அணிகளும் பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய சவால் ஆகும்.

இந்த முறை ஆர்சிபி அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தாலும், ஹேசில்வுட் களமிறங்குவது குறித்து போட்டியின்போதே முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article