கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வெப்பம் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 101 டிகிரி ஃபாரனிட் வெப்பம் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் இப்போதே பாதிப்படைய தொடங்கியுள்ளனர்.

மழை வாய்ப்பு:

இந்தநிலையில் தமிழ்நாட்டு பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வளிமண்டல மேல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலட் எச்சரிக்கை:

தமிழ்நாட்டில் நாளை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெயர் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:வரும் 13ம் தேதி 22 மண்டலங்களில் மறியல்... போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்.. ஏன் தெரியுமா?

மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்?

நாளை ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது. அதேபோன்று நாளை காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பம் அதிகரிக்கும்:

அதே போன்று தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.