
மார்ச் 14, மாஸ்கோ (World News): நேட்டோ (NATO) படைகளுடன் இணையும் உக்ரைன் (Ukraine) நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) முடிவை எதிர்த்து, ரஷிய அதிபர் (Russia President) விளாடிமிர் புதின் (Vladimir Putin) உத்தரவின் பேரில், ரஷிய படைகள் உக்ரைன் (Ukraine Russia War) மீது போர்தொடுத்துச் சென்றது. போர் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்கா கொடுத்த நிதி, இராணுவ தளவாடங்கள் உதவியுடன் உக்ரைன் போரில் தாக்குப்பிடித்தது. போரை தனது படைபலத்துடன் ரஷியா முன்னெடுத்துச் சென்றது. பல பொருளாதார தடைகளை ரஷியா எதிர்கொண்டபோதிலும், இந்தியா, சீனா, வடகொரியா போன்ற நட்பு நாடுகளின் உதவியுடன் அதனை எதிர்கொண்டது.
அமைதி பேச்சுவார்த்தை:
தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தலைமையிலான அமெரிக்கா அரசு, உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரும் பணிகளை முன்னெடுத்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவின் எதேச்சதிகார போக்கு, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சி அடைய செய்தாலும், உக்ரைனுக்கு அவர்கள் ஆதரவாக இருப்பதாக அறிவித்துவிட்டனர். அமெரிக்காவின் தலைமையில் சவூதி அரேபியாவில் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு முதலியேயே உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. ரஷ்ய தரப்பு சில கோரிக்கைகளை முன்வைத்து பின் பச்சைக்கொடி காண்பித்தது. Sunita Williams: பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல்.. சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.., நாசா விளக்கம்..!
உக்ரைன் - ரஷ்யா சம்மதம்:
இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர உறுதுணையாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன பிரதமர் ஜி ஜின்பிங் உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதே நேரத்தில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில், குறுகிய கால இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விரும்பம் இல்லை என்றாலும், இந்த தற்கால முடிவை பயன்படுத்தி, நிலையான போர் நிறுத்த விசயத்திற்கு விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அரசு பிரதமரிடம் வைத்த கோரிக்கை:
உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா தற்போது வரை தனது நிலையை தெளிவுபடுத்தாமல், இரண்டு நாடுகளும் அமைதியின் பெயரில் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தது. போரின் தொடக்கத்தின்போது, ரஷ்ய அதிபர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும், மோடி பேசினால் புதின் கேட்பார் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதரும், உக்ரைன் அரசும் கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பேரில் பிரதமர் நரேந்திர மோடியும் தனது தரப்பில் முயற்சிகளை எடுத்தார். ரஷ்யாவும் போர் தொடுத்து சென்றதன் காரணத்தை இந்தியாவிடம் விலக்கி கூறினாலும், முடிந்தளவு பிரச்சனையை பேசி முடித்துக்கொள்ள கோரிக்கை முன்வைக்கப்பட்டது.