Premji: அய்யோ இந்த மனுஷன் அடங்க மாட்டாரு போல.. மனைவியை குஷிப்படுத்த பிரேம்ஜி செய்ததைப்பாருங்க!

4 days ago
ARTICLE AD BOX

Premji: அய்யோ இந்த மனுஷன் அடங்க மாட்டாரு போல.. மனைவியை குஷிப்படுத்த பிரேம்ஜி செய்ததைப்பாருங்க!

News
oi-Jaya Devi
| Published: Thursday, February 20, 2025, 19:53 [IST]

சென்னை: பிரபல இசையமைப்பாளரும் இயக்குநர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி 45 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி, தனது மனைவியை குஷியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை என இணையத்தில் பலர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர், இசையமைப்பாளர்,பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளைக் கொண்ட பிரேம்ஜி,
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா, கோட், சரோஜா, சென்னை 600028, மாநாடு. கோட் ஆகிய மாஸ் படங்களில் நடித்துள்ளார். 40 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை முரட்டு சிங்கல் என சொல்லிக்கொண்டு திருந்த பிரேம்ஜி. அனைத்து நடிகைகளுக்கு ரூட் போட்டுக்கொண்டே இருந்தார். இணையத்தில் பலரும் எப்போது உங்களுக்கு திருமணம் என கேட்டு கேட்டு அலுத்துப்போய் விட்டார்கள்.

Premji indhu

எதுக்கு இந்த வேலை: இந்த நிலையில், கடந்த ஆண்டு பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்பவருக்கும் திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில், பிரேம் ஜியின் நெருங்கிய நண்பர்களான சென்னை 28 படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜி மனைவியுடன் இணைந்து ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மனைவிக்கு சமைத்துக் கொடுக்கிறார் என்று, தோசை கல்லையே திருப்பி அலப்பறை செய்துள்ளார். அவர் செய்யும் அட்டகாசத்தைப் பார்த்து அவரது மனைவி இந்து. விழுந்து விழுந்து சிரிந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தம்பிக்கு விருப்பம் இல்ல: பிரேம்ஜிக்கு திருமணமாகி ஒன்பது மாதம் ஆகி இருக்கும் நிலையில், தனது மனைவி ஆசைப்படி பிரேம்ஜி மாமியார் மசாலா என்ற பெயரில் மசாலா கம்பெனி ஒன்றை தொடங்கி உள்ளார்.அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரேம்ஜியின் மனைவி இந்து, இந்த திருமணத்தில் என் தம்பிக்கு விருப்பமே இல்லை. இதனால், தம்பி பிரேம்ஜியுடன் பேசுவதில்லை. அவர் எவ்வளவோ பேச முயற்சி செய்தாலும் அவன் கண்டு கொள்ளவில்லை என்றார். மேலும், என் கல்யாண ஆல்பத்தில், அம்மா, அப்பா, தாத்தா மற்றும் பாட்டி போட்டோக்களை எடிட் செய்து தான் வைத்தோம். அதில் கூட என் தம்பி இல்ல. அவன் கல்யாணத்துக்கு கூட வரவில்லை. என்னுடைய கணவரை அவனுக்கு பிடிக்கவே இல்லை. ஆனாலும், பிரேம்ஜி அவனிடம் பேச முயற்சி செய்கிறார். இப்போது தான் அவன் கல்லூரியில் படிக்கிறான், சின்னப்பையன் என்பதால், காலப்போக்கில் அவன் புரிந்து கொள்வான் என்று பேசி இருந்தார்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
actor premji amaran instagram cooking video trending on social media, நடிகர் பிரேம்ஜி அமரன் இன்ஸ்டாகிராமில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது
Read Entire Article