ARTICLE AD BOX
Prabudeva Concert: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று பிப்ரவரி 22ம் தேதி சனிக்கிழமை நடிகர், இயக்குநர், நடன இயக்குநரான பிரபுதேவாவின் டான்ஸ் லைவ் கான்செர்ட் நடைபெற்றது. இந்த கான்செர்ட்டில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, ஏராளமான திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர். நடிகர் தனுஷ் கான்செர்ட்டில் பங்கேற்று ரவுடி பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.
வைப்பா இருக்கும்ன்னு நெனச்சோம்
இந்நிலையில், பிரபுதேவா கான்செர்ட்டில் பங்கேற்ற பலரும் இதனை குறை சொல்லி வருகின்றனர், இது தொடர்பாக பேசிய ரசிகர்கள், பிரபு தேவா கான்செர்ட்ன்னு சொன்னாங்க. நல்லா வைப்பா இருக்கும்ன்னு நினைச்சு டிக்கெட் புக் பண்ணுனோம். நாங்க புக் பண்ணும்போது, ஸ்டேஜ்க்கு முன்னாடியே சீட்டிங் இருக்கும்ன்னு சொன்னாங்க. ஆனா கடைசியா பின்னாடி நிக்க வச்சிட்டாங்க. ஜெனரல்ல நார்மல் சீட்டிங்ல இருக்கவங்க மாதிரி உக்கார வச்சிருந்தாங்க.
ஒரு மணி நேரம் கூட நிக்க முடியல
இப்போ இருக்க கான்செர்ட் எல்லாம் நிக்குறவங்க பின்னாடி போயிடுவாங்க. ஆனா, இதுல அப்படி இல்ல. நாங்க 6.30 டூ 7 மணிக்குள்ள உள்ள போனோம். எங்களால ஒரு மணி நேரம் கூட உள்ள நிக்க முடியல. ஸ்பீக்கர்ஸ் எல்லாம் எதுவுமே சரியா இல்ல. கான்செர்ட்னா தொடர்ந்து மியூசிக், டான்ஸ் போயிட்டே இருக்கும். ஆடியன்ஸ் எல்லாம் நல்லா இன்வால்வ் ஆவாங்க. ஆனா இது அவார்டு நிகழ்ச்சி மாதிரி இருக்கு. விஐபி எல்லாம் முன்னாடி உக்கார வச்சிட்டு எங்கள பின்னாடி நிக்க சொல்லிட்டாங்க. எங்களால உள்ள நிக்கவே முடியல. குடுத்த காசுக்கு சுத்தமா ஒர்த் இல்ல. டிக்கெட் கொடுக்கும் போது ஒன்னு சொன்னாங்க. ஆனா கான்செர்ட் நடக்கும் போது மொத்தத்தையும் மாத்திட்டாங்க.
இது பிளாப் கான்செர்ட்
இதுனால சுத்தமா இது சாட்டிஸ்பைட் ஆகல. இப்போ கான்செர்ட் பாக்க உள்ள போறவங்களுக்கு கூட இடம் இருக்குமானு எனக்கு தெரியல. இது மொத்தமா பிளாப் ஆன கான்செர்ட். இது கான்செர்ட்டே இல்ல. டான்ஸ் ஷோ மாதிரி இருக்கு. 2 பேர் தான் டான்ஸ் ஆடுனாங்க. விஐபி எல்லாத்தையும் முன்னாடி வச்சிட்டு எங்கள பின்னாடி தள்ளுனா என்ன தெரியும். இத நீங்க முன்னாடியே சொல்லிருந்தா நாங்க வந்திருக்கவே மாட்டோமே.
ரொம்ப மோசமான அனுபவம்
ஸ்பீக்கர் இல்ல, பாக்க முடியல, நல்லா இருக்க மாதிரியும் தெரியல. இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வெளிய வர தான் போறாங்க. ரொம்ப மோசமான கான்செர்ட் இது. இதுக்கு முன்னாடி சிங்கர்ஸ் கான்செர்ட் பாத்திருக்கோம். ஆனா இது டான்ஸ் கான்செர்ட். அது எப்படி இருக்குன்னு பாக்க தான வந்தோம். ஆனா பர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸே ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்கு.
இது டான்ஸ் கான்செர்ட்டுன்னு சொல்றாங்க. ஆன டான்ஸ் ஆட இடமே இல்ல. மூச்சு விட கூட முடியல. வைப் கான்செர்ட்டுன்னு போட்ருக்காங்க. ஆனா வைப்பே இல்ல. பிரபுதேவா சார் இப்போ தான் வந்தாரு அவர பாத்த உடனே நாங்க கிளம்பி வந்துட்டோம்.
கொடுத்த காசுக்கு மதிப்பு இல்ல
உள்ள அரேஜ்மெண்ட்ஸே இல்ல. என்னோட டிக்கெட்ட ஸ்கேன் கூட பண்ணல. நாங்களா ஃபேன் பிட்டுன்னு கேட்டு தான் உள்ள போனோம். உள்ள ஃபுட் ஸ்டால் போட்ருக்காங்க. அவ்ளோ தான். 3 ஆயிரம் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கிட்டு வரோம்ன்னா அதுக்கான வேல்யூ இருக்கணும் இல்ல. கான்செர்ட் எப்டி இருக்கும்ன்னு ஒரு மேப் போட்டு காட்டுறீங்கன்னா, அத எதிர்பார்த்து தான நாங்க வர்றோம். அந்த லே அவுட்டே இல்லன்னா எதுக்கு போடணும். இது சீட்டிங் தான என கொந்தளித்தனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்