Police Encounter: கடலூரில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

கொள்ளையன் மீது துப்பாக்கிச் சூடு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஸ்டீபன் என்ற கொள்ளையனை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த ஸ்டீபன் காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்ணாமலை நகரில் வீடு ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஸ்டீபனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் மீது திருச்சி, நாகை, தஞ்சை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.