Parenting Tips : உங்கள் குழந்தைகளைக் கண்டிக்காமல் அவர்களை நல்வழிப்படுத்துவது எப்படி தெரியுமா?

3 days ago
ARTICLE AD BOX

எதிர்மறை வார்த்தைகளை தவிர்க்கவேண்டும்

உங்கள் குழந்தைகளின் எதிர்மறை விஷயங்களில் கவனம் செலுத்தாமல், அவர்களை நீங்கள் பாராட்டவேண்டும். நேர்மறையாக நீங்கள் அவர்களுக்கு உதவும்போது, குறிப்பாக அவர்கள் சிறப்பான விஷயங்களை செய்யும்போது, அதாவது அவர்களின் பொருட்களை சுத்தம் செய்யும்போது, அவர்களுக்கு ‘நல்ல வேலை’ என பாராட்டினால், அவர்கள் அதற்காகவே அந்த வேலைகளை திரும்ப செய்வார்கள். அவர்கள் நல்ல காரியங்களை செய்வதற்கு இது ஊக்குவிக்கும்.

தேர்வுகள்

உங்கள் குழந்தைகளுக்கு சில தேர்வுகளைக் கொடுப்பது, அவர்களுக்கு கட்டுப்பாட்டு உணர்வு மற்றும் அவர்களின் செயல்களை அவர்கள் பொறுப்புடன் முடிக்க உதவும். நீங்கள் உங்களின் செருப்பை அணிந்துகொள்ளுங்கள் இப்போது என்பதற்கு பதில், நீங்கள் இன்று சிவப்பு செருப்புக்களை அணிய விரும்புகிறீர்களா? அல்லது ஊதாவா என்று கேட்கலாம்.

பெற்றோர் செய்வதை குழந்தைகளும் கடைபிடிக்கிறார்கள்

குழந்தைகள் தங்கள் பெற்றோரின் நடவடிக்கைகளை அப்படியே நகலெடுக்கிறார்கள். நீங்கள் கடும் எரிச்சலான நேரங்களில் அமைதியாக நடந்துகொண்டால், உங்கள் குழந்தைகளும் உணர்வுப்பூர்வமான நேரங்களில் அமைதியாக இருக்க பழகுகிறார்கள். நீங்கள் அமைதியை இழந்து குரலை உயர்த்தினால், அவர்களும் அதுதான் சரியென்று எண்ணிக்கொள்கிறார்கள்.

பேசுங்கள்

உங்கள் குழந்தைகள் தவறாக நடக்கும்போது அல்லது குறும்புத்தனங்கள் செய்யும்போது, அவர்களை அவர்கள் அறைக்கு அனுப்பிவிடாமல் உங்களுடன் அமர்ந்து அமைதியாக சிறிது நேரம் பேச அனுமதியுங்கள்.

சவால்கள்

உங்கள் குழந்தைகள் சில சவால்களை எதிர்கொள்ளட்டும். அப்போதுதான் பொறுப்புணர்வை கற்றுக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தைகள் குளிர்காலத்தில் ஸ்வெட்டர் போட்டு வெளியில் செல்வதை தவிர்த்தால், அவர்களுக்கு குளிர் ஏற்படும். இது அவர்களுக்கு சரியான உடை அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

கவனத்தை திசை திருப்புதல்

உங்கள் குழந்தைகளை, எதையாவது செய்யும்போது, அவர்களை திசைதிருப்புவது எப்படி? குறிப்பாக உங்கள் குழந்தைகள் சுவற்றில் கிறுக்கினால், அதை செய்வதைத் தடுக்க நீங்கள் அவர்களை பேப்பர் மற்றும் கிரையான்கள் வைத்து வண்ணம் தீட்ட உதவவேண்டும்.

அவர்களை கேட்டுக்கும் காதுகள் அவர்களுக்கு தேவை

சில நேரத்தில் குழந்தைகள் சோர்வாக அல்லது எரிச்சலாக உணர்ந்தால், அப்போது அவர்களை சரிசெய்யும் முன்னர், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களிம் ’நீங்கள் சோர்வாக இருப்பது புரிகிறது’ என்று கூறிப்பாருங்கள். அது அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்.

வழக்கம்

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வழக்கம் தேவை. அவர்களுக்கு என்ன எதிர்பார்க்கவேண்டும் என்று தெரியும்போது, அவர்கள் அதிக பாதுகாப்பாக உணர்வார்கள். அவர்களுக்கு சாப்பாடு, உறக்கம் மற்றும் வீட்டுப்பாடங்கள் என ஒரு வழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டும்.

கதைகள் மற்றும் நீங்களே மாறுவது

சில நேரங்களில் கதைகள் அல்லது நீங்களே அதைச் செய்வது, குழந்தைகளுக்கு சரி எது, தவறு எது என்பதை புரிந்துகொள்ள உதவும். தவறான முடிவுகள் எடுப்பதால் என்ன நடக்கும் என்பதை கதைகள் மூலம் உணர்த்தலாம். பிரச்னைகளை தீர்ப்பதில் நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து செயல்படலாம்.

Priyadarshini R

eMail
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article