ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான பணிகளில் ஈடுபட மறுத்ததால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 100 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள், முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பல நிகழ்ச்சிகளின்போது பணிக்கு வராமல் இருந்ததற்காகவும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய மறுத்ததற்காகவும் காவலர்களும் அதிகாரிகளும் தங்கள் பதவியை இழந்துள்ளதாக பஞ்சாப் காவலர் கூறியுள்ளார்.
குறிப்பாக லாகூரின் கதாஃபி ஸ்டேடியத்தில் இருந்து, குறிப்பிட்ட ஹோட்டலுக்கு செல்லும் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்கள் பணிக்கு வராமலும் பணியைச் செய்ய மறுத்தும் உள்ளனர்.
இந்த சம்பவத்தில் நேரடியாக தலையிட்ட பஞ்சாப் IGP, உஸ்மான் அன்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். "சர்வதேச நிகழ்வுகளில் பாதுகாப்பு அளிக்கும்போது அலட்சியத்துக்கு இடமே இல்லை" என அவர் கூறியிருக்கிறார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் ஏன் பணியைச் செய்ய மறுத்தனர் என்பதற்கு அதிகாரப்பூர்வமாக காரணங்கள் கூறப்படவில்லை. காவலர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்கவைக்கப்பட்டதால் பணிச்சுமை அதிகமாக இருந்ததாக சில உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தோல்விக்குப் பிறகு அவமானகரமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான் அணி. தொடரை நடத்தும் நாட்டின் அணி சிறப்பாக விளையாடாதது ரசிகர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.
Pakistan அமைதியாக உள்ளது...
சாம்பியன்ஸ் டிராபி 2025ல் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்தது இந்திய அணி. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தகவல் தொடர்பு அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்தார்.
ஜியோ நியூஸ் தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் பதிவு செய்ய விரும்புவதென்னவென்றால் பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை அமைதியாகவும் மிகச் சிறப்பாகவும் நடத்திவருகிறது. நம் மைதானங்கள் நிரம்பி வழிகின்றன, உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வருகின்றனர், மகிழ்ச்சியான கூட்டத்தை காண முடிகிறது, நம் தெருக்களில் மக்கள் கிரிக்கெட்டின் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்" எனப் பேசியுள்ளார்.
Jos Buttler: `இந்தியாவுக்கு சாதகமாக..!' - துபாயில் மட்டுமே விளையாடுவதால் இங்கிலாந்து அதிருப்தி