ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே காராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற பயிற்சி போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து லாக்கி பெர்குசனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் நியூசாலந்து அணிக்கு தொடர் தொடங்குவதற்கு முன்னரே பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 320 ரன்கள் குவித்தது. மிக பெரிய இந்த இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான் 260 ரன்களில் ஆல்அவுட்டான நிலையில், 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றியை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் சேஸிங்
டாஸ் வென்று பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பவுலிங் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஓபனர் வில் யங் 107, டாப் லாதம் 118, பிளிப்ஸ் 61 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில், ஸ்டிரைக் பவுலரான ஹாரிஸ் ராஃப் 10 ஓவரில் 83 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து 320 ரன்கள் என்கிற பெரிய இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான் 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக குஷ்தில் ஷா 69, பாபர் அசாம் 64, சல்மான் ஆகா 42 ரன்கள் அடித்தனர். நியூசிலாந்து பவுலர்களில் கேப்டன் சாண்ட்னர், வில் ஓ'ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரேஸ்வெல், ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்
மேலும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் புதியதொரு சாதனை புரிந்த பாபர் அசாம்
மோசமான தொடக்கம்
பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் அமையாமல் போனது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான செளத் ஷகீல் 6, கேப்டன் முகமது ரிஸ்வான் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இதன் பின்னர் ஓபனராக களமிறங்கிய பாபர் அசாம் - ஃபகர் ஜமான் இணைந்து சிறிய பார்டனர்ஷிப் அமைத்தனர். ஜமான் 24 ரன்களில் வெளியேறினார்.
நிதானமாக பேட் செய்து வந்த பாபர் அசாம் மெதுவாக ரன்களை சேர்த்தார். அவருடன் களத்தில் இருந்த சல்மான் ஆகா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கட்டுக்கோப்பாக பந்து வீசிய நியூசிலாந்து பவுலர்களுக்கு எதிராக கட்டுப்பாடு இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
28 பந்துகளில் 42 ரன்களை குவித்த ஆகா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக வந்த தையப் தாஹிர் ஒரு ரன்னில் நடையை கட்டினார். இருப்பினும் ஒற்றை ஆளாக போராடி வந்த பாபர் அசாம் அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் அதற்கு பிறகு நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. 90 பந்துகளை எதிர்கொண்டு 64 ரன்கள் அடித்த பாபர் அசாம், ஸ்பின்னர் சாண்ட்னர் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவரது விக்கெட்டுக்கு பின் நியூசிலாந்து வெற்றி வாய்ப்பு பிரகாசமானது
மேலும் படிக்க: சொந்த மண்ணில் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த நியூசிலாந்து
குஷ்தில் ஷா அதிரடி
கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டிய குஷ்தில் ஷா விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு கம்பெனி கொடுக்க யாரும் இல்லாத நிலையில் ஒற்றை ஆளாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார்.49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த குஷ்தில் ஷா அவுட்டாகினார்.
இதன் பிறகு ஷாகின் அப்ரிடி 14, நசீம் ஷா 13, ஹரிஸ் ராஃப் 19 என சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட்டானார்கள். அதிரடி சதமடித்து கடைசி வரை அவுட்டாமல் களத்தில் இருந்து 118 ரன்கள் அடித்த டாம் லாதம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 2 புள்ளிகளை பெற்றுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்