ARTICLE AD BOX

கோலி பேசுகையில், “ரோஹித் ஆட்டமிழந்த பிறகு, பெரிய பார்ட்னர்ஷிப் எங்கள் அணிக்கு தேவைப்பட்டது. அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டிய முக்கிய ஆட்டத்தில் நான் இவ்வாறு பேட்டிங் செய்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நிதானமாக எனது ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். இன்று ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஸ்க் எடுக்க கூடாது என முடிவு செய்துவிட்டு தான் களத்தில் இறங்கினேன். மிடில் ஓவர்களில் நின்று ஆட வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. ஒருகட்டத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.
அப்போது, என்னாலும் சில பவுண்டரிகளை அடிக்க முடிந்தது. என்னுடைய ஆட்டத்தைப் பற்றி எனக்கு நல்ல புரிதல் இருந்தது. இது மற்ற கவனச்சிதறல்கள், விமர்சனங்களிலிலிருந்து விலகி எனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த உதவியது. ஒவ்வொரு பந்திலும் 100 சதவீத உழைப்பை போட்டு விளையாட வேண்டும் என முடிவு செய்தேன்.

சுப்மன் கில்லும் இன்று மிகச்சிறப்பாக விளையாடினார். ஒருநாள் பார்மட்டில் நம்பர் 1 பேட்டராக இருக்கும் அவர், தன்னால் முடிந்ததை சிறப்பாக செய்துவிட்டார்’’ என வெற்றிக்கு பிறகு விராட் கோலி பேட்டி அளித்துள்ளார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play