PAK v IND: துபாய் பிட்ச் யாருக்கு சாதகமாக இருக்கும்? - டிக்கெட் விற்பனையில் நடந்த சாதனை

16 hours ago
ARTICLE AD BOX
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணி அளவில் தொடங்கவுள்ளது. இதற்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதியிருந்தன.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை அந்த அணி இழக்கும் என்பதால் இந்தப் போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் 25 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிப்ரவரி 23ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையான போட்டிக்கான டிக்கெட் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே பிளாட்டினம், கிராண்ட் லான்ச் உள்ளிட்ட பிரிவுகளிலும் உள்ள அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. அந்த நேரத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரசிகர்கள் டிக்கெட்டை வாங்க ஆன்லைனில் லாகின் செய்து காத்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்தப் போட்டிக்கான பிளாட்டினம் டிக்கெட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 47,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கிராண்ட் லான்ச் பிரிவின் டிக்கெட் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.1,19,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கான அனைத்துப் பிரிவுகளில் உள்ள டிக்கெட்களும் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் சர்வதேச மைதானத்தில் இருக்கும் பிட்ச்சானது புற்கள் நிறைந்த பிட்ச் தான். பிப்ரவரி 20ஆம் தேதி நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதே மைதானத்தில் தான் களம் கண்டன. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியால் எளிதாக அதிக ரன்களை குவிக்க முடிந்தது. காரணம் பிட்சில் தொய்வு ஏற்படாமல் இருந்தது. அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியால் எளிதாக ரன்களைக் குவிக்க முடியவில்லை.

ஹர்திக்
Dubai

காரணம் பிட்ச்சில் தொய்வு ஏற்பட்டிருந்தது. எனவே இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும். முதல் இன்னிங்ஸ் தான் பேட்டிங் செய்வதற்கு சிறந்த நேரம், அப்போது தான் பிட்ச் உறுதியாக இருக்கும். ஆக, டாஸை வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே வாய்ப்பு அதிகம்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article