ARTICLE AD BOX

Rekhachithram: திரில்லருக்கு பெயர் போன மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹிட்டடித்த ரேகா சரித்திரம் ஓடிடிக்கு வந்துள்ளது. அப்படம் எப்படி இருக்கிறது என்ற சுவாரஸ்ய முக்கிய விஷயங்கள் அடங்கிய தொகுப்புகள்.
பொதுவாக திரில்லர் என்றாலே பரபரப்பு காட்சிகளும், மாஸ் பின்னணி இசையும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் திரில்லரில் இன்னொரு வகை இருக்கிறது. ஸ்லோ பர்ன் திரில்லர். அமைதியாக நகரும் காட்சிகளே பரபரப்பாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் தியேட்டரில் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் கொடுத்தது. ஆனால் இப்படி இந்த வருடம் தியேட்டரில் ஹிட்டடித்தால் ஓடிடியில் கலாய் வாங்குகிறது. அதுபோல இந்த படத்திலும் சிலர் குறை சொல்லி வருகின்றனர்.

ஆஹா, ஓஹோ எனச் சொல்ல கூடிய வகையில் இல்லாமல் இருந்தாலும் இப்படம் சூப்பர் டைம்பாஸ் படமாகவே இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் நடுக்காட்டில் இருக்கும் ஒருவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் 40 வருடம் முன்னாடி கொலை செய்யப்பட்டு இங்கு புதைக்கப்பட்டதாக வாக்குமூலம் கொடுக்கிறார்.
பின்னர் அவர் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். அது பரபரப்பை கிளப்ப போலீஸ் அந்த இடத்தினை தோண்டுகின்றனர். ஒரு பெண்பிணம் கிடைக்க, இந்த பொண்ணு யார், கொலை செஞ்சது யார் என கண்டுபிடிக்கிறது காவல்துறை.
இதில் மம்முட்டியின் பழைய படத்தினை அருமையாக இணைத்து ஏஐ மூலம் அவரை சரியாக கொண்டு வந்தும் அசத்தி இருக்கின்றனர். போலீஸாக ஆசிப் அலியும், அனஸ்வரா ராஜனும் நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர். தமிழ் டப்பிங்கோடு சோனி லைவில் படம் வெளியாகி இருக்கிறது.