ARTICLE AD BOX
OTT: மலையாள திரையுலகம் கடந்த வருடம் தொடர்ந்து சூப்பர்ஹிட் கொடுத்த நிலையில் இந்த வருடத்தின் மற்றுமொரு சம்பவத்தை செய்துள்ளது. அப்படி ஒரு படமாக ஓடிடியின் இந்த வாரம் ரிலீஸான ஆபிசர் ஆன் டியூட்டி படத்தின் திரை விமர்சனம்.
ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சக்கா போகன், பிரியாமணி, ஜெகதீஷ், விஷாக் நாயர் உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் 20 மார்ச் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. மலையாள படம் என்றாலும் தமிழில் டப் இருக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இசையில் பின்னணி மிரட்டி இருக்கின்றனர்.
பனிஷ்மென்ட் முடிஞ்சு புதுசா வேலைக்கு வந்திருக்குற போலீஸ் ஆபிஷர் ஒரு திருட்டு செயின் கேஸை விசாரிக்கிறாரு. ஆனால், அந்த கேஸுக்கு பின்னாடி வேற ஒரு தொடர்பு இருக்குனு சந்தேகிக்கிற அவர் அதுக்கு அப்பறம் நடக்குற சமாச்சாரம் தான் படம்.

Officer
படத்தின் திரைக்கதை ஜெட் ஸ்பீட்ல போகுது. எந்த இடத்திலும் எங்கேயும் தொய்வு ஏற்படாமல் இருக்கிறது. ஒரு சாதாரண சீன் பஸ்ல நடக்குது. ஆனால் அதை சரியாக இன்னொரு இடத்தில் கனெக்ட் பண்ற விதமே படத்தை மாஸாக்குகிறது.
முதல் பாதி பரபரப்பாய் விசாரணையில் போக இரண்டாம் பாதியில் ஒரு எலியும், பூனையும் கதையாக மாறிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் காட்சிகள் நாம நினைக்குற மாதிரியே இருப்பதும் இரண்டாம் பாதியில் இருப்பது மிகப்பெரிய மைனஸ்.
Also Read: விஜயகாந்த் நடிக்க வேண்டியது அந்த சூப்பர்ஹிட் படம்… அட இப்படி மிஸ் பண்ணிட்டாரே!