ARTICLE AD BOX
Oscars 2025: ஆடம்.. என்ன உடை இது.. ஆஸ்கர் அரங்கில் தக் லைஃப் செய்த காமெடி நடிகர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. உலகளவில் கவனிக்கப்படுவதால்.. திரை பிரபலங்கள் ஆடம்பரமாக உடை அணிந்து வருவார்கள். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் ஆடம் சாண்ட்லர் கேஷுவல் உடையுடன் செய்த தக் லைஃப் சம்பவம் மொத்த அரங்கையும் சிரிப்பலையில் அதிரவைத்துள்ளது.
ஆஸ்கர் விருதுகள் திரை உலகில் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஹாலிவுட்டின் முக்கியமான இரவு என்று ஆஸ்கர் விருதை வர்ணணை செய்வார்கள். ஹாலிவுட் மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சிக்காக மொத்த திரையுலகும் அந்த இரவு ஒன்றிணைவார்கள்.

ஆஸ்கர் விருது எந்தளவுக்கு முக்கியமோ.. அதே அளவு அந்த நிகழ்ச்சிக்கு வரும் திரை பிரபலங்களின் உடையும் கவனிக்கப்படும். ரெட் கார்பேட்டில் பிரபலங்கள் மாடனாகவும்.. ஸ்டைலாகவும் ஒய்யார நடை போடுவார்கள். இதற்காகவே பல நாட்கள் மெனக்கெட்டு தயாராகி வருபவர்களும் உள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சியிலும் பெரும்பாலான பிரபலங்கள் அப்படித்தான் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்கர் அரங்கத்தில் அனைவரும் பிரம்மாண்டமான ஆடைகளுடன் கெத்தாக அமர்ந்திருக்க.. ஆடம் சாண்ட்லர் எனும் பிரபல நகைச்சுவை நடிகர் கேஷ்வலான உடையுடன் தக் லைஃப் செய்துள்ளார்.
ஆடம் சாண்ட்லர் பிரபல ஸ்டாண்டப் காமெடியன் ஆவர். பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர் கொனன் ஓ பிரெய்ன், ஆஸ்கர் நிகழ்ச்சியில் கெத்தாக உடை அணிவதன் முக்கியத்துவம் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது கேமரா திரும்பிய சாண்ட்லரின் கெட்டப் கவனம் ஈர்த்தது.
ஸ்வெட் ஷர்ட்.. ஜிம் ஷார்ட்ஸ்.. ஸ்நீக்கர்ஸ் (காலணி) ஆகியவற்றுடன் தலைக்கு ஹூடி அணிந்தபடி ஆடம் சாண்ட்லர் சஜகமாக அமர்ந்திருந்தார். ஒரு நிமிடம் அதிர்ச்சியான பிரெயின், ஆடம்.. நீங்கள் என்ன உடை அணிந்திருக்கிறீர்கள். என்று கேட்டார். அதற்கு சாண்ட்லர், என் உடையை பற்றி இங்கு யாருமே கவலைப்படவில்லை. நீங்கள்தான் அதைப்பற்றி பேசுகிறீர்கள். என்றார்.
ஆடம் சாண்ட்லர் இப்படி பேசி முடித்ததும்.. மொத்த அரங்கமும் சிரிப்பலையால் அதிர்ந்தது. அதற்கு பிரெயின், நள்ளிரவு 2 மணிக்கு வீடியோ கேம் விளையாடும் கெட்டப்பில் இருக்கின்றீர்கள். என்று சிரித்துக் கொண்டே சொன்னார். இதற்கு பதிலளித்த சாண்ட்லர், உங்களுக்கு ஒன்று தெரியுமா.. நான் நல்லவன். அதனால் நான் எப்படி நினைக்கிறேனோ அப்படி தெரிவேன்.
அதனால் உடையை பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஆடியன்ஸ் முன்னிலையில் என் உடையை பற்றி பேசி கவனம் கொடுத்ததற்கு நன்றி. என்று கூறினார். அரங்கம் மீண்டும் சிரிப்பலையில் அதிர.. ஆடம் சாண்ட்லர் நக்கலாக.. விளையாடிக் கொண்டே அரங்கத்தில் இருந்து வெளியேறினார்.
அப்போது அங்கு வந்த நடிகர் திமோதி சலாமெட் என்பவரை உற்சாகமாக அழைத்து வழிவிட்டார். சாண்ட்லரின் இந்த செயல் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் ரசிகர்கள், ஆடம் சாண்ட்லரை பாதுகாக்க வேண்டும். அவர் ஹாலிவுட்டின் பொக்கிஷம் என்று சிலாகித்து வருகிறார்கள்.