ARTICLE AD BOX
OSCAR AWARD 2025: 13 பிரிவுகளில் நாமினேட் ஆன படம்.. ஆஸ்கர் விருதுன்னா சும்மாவா... மேடை அதிர கரகோஷம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: 97ஆவது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடிகர், நடிகைகள் ஆரவராத்துடன் யாருக்கு விருது கிடைக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த விருது விழாவில் நாமினேஷன் பட்டியலில் 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு எமிலியா பெரெஸ் (EMILIA PEREZ) அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டும் இல்லாமல் மேலும் அங்கீகாரத்தை பெற்றிருப்பது ரொம்ப ஸ்பெஷல்.
திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர். கடந்த 96 ஆண்டுகளாக திரைக்கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது அகாடமி ஆஃப் மோஷன் பிக்ச்சர்ஸ் .அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் உள்ல டால்பி திரையரங்கில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்குகிறார். டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வயாளர்களை கவர்ந்தனர்.

கவனம் ஈர்த்த நடிகை: இந்த விழாவில் பாடகியும், நடிகையுமான அரியானா கிராண்டேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அணிந்து வந்த உடை பலரது கவனத்தை ஈர்த்தது. பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாட்டு பாடி கண்ணீரை வரவழைத்தார்.
கடும் போட்டி: புரூட்டலிஸ்ட் என்ற ஆங்கில திரைப்படமும், விக்கட் என்ற திரைப்படமும் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. (CONCLAVE) மற்றும் எ கம்பிளிட் அன்னோன்(A COMPLETE UNKNOWN ) திரைப்படங்கள் 9 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், கடும் போட்டி நிலவியது.
இந்தியா சார்பில், பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த அனுஜா என்ற குறும்படம் மட்டும் சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்)' பிரிவில் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அந்தஸ்து: ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் 13 பிரிவுகளில் ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் (EMILIA PEREZ) நாமினேட் செய்யப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றது. மேலும், இப்படம் ஆங்கில மொழி அல்லாத திரைப்படங்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளது. இந்த விழாவில் பல விஷயங்கள் வியக்க வைத்துள்ளன. அந்த வகையில், எமிலியா பெரெஸ் (EMILIIA PEREZ) படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான்தான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை என்பது கூடுதல் சிறப்பை பெற்றது.
குவியும் விருது: தற்போது ஜெஸ்ஸி ஐசன்பெர்க் இயக்கிய எ ரியல் பெயின் படத்திற்காக நடிகர் கீரன் கல்கின் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை FLOW வென்றது. குறிப்பாக, எமிலியா பெரெஸ், விக்கட் , டியூன் இரண்டாம் பாகம், தி புரூட்டலிஸ்ட் ஆகிய திரைப்படங்கள் சிறந்த திரைப்படமாக கருதப்படும் நிலையில், இதில், சிறந்த நடிகை, இயக்கம், நடிகர்கள் என கடும் போட்டி நிலவுகிறது.
