ARTICLE AD BOX
Oscar 2025: ஆஸ்கர் மேடையில் கதறி அழுத அவதார் ஹீரோயின்.. என்ன மேட்டர் தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜாக் ஆடியார்ட் எழுதி இயக்கி 2024 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் மொழி திரைப்படமான எமிலியா பெரெஸ் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை அவதார் படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோ சல்டானா வென்றுள்ளார். ஆஸ்கர் விருதை வாங்கியதும் கண்கலங்கி அவர் உருக்கமாக பேசி ரசிகர்களை உருக வைத்தது.
கடந்த ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம் தான் எமிலியா பெரெஸ். பிரெஞ்சு எழுத்தாளர் போரிஸ் ரசோனின் 2018 நாவலான Écoute அத்தியாயத்தைதழுவிய திரைப்படமாகும். கார்லா சோஃபியா கேஸ்கான்,ஸோ சல்டானா,செலினா கோம்ஸ், அட்ரியானா பாஸ், மார்க் இவானிர் மற்றும் எட்கர் ரமிரெஸ் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். இப்படம் பாஃப்டாக்கள், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள், கோல்டன் குளோப்ஸ் மற்றும் SAG விருதுகள் ஆகிய விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த துணை நடிகை: A Complete Unknown படத்தில் நடித்த மோனிகா பார்பரோ, Wicked படத்தில் நடித்த அரியானா கிராண்டே, The Brutalist படத்தில் நடித்த ஃபெலிசிட்டி ஜோன்ஸ், இசபெல்லா ரோசெலினி ஆகியோர் சிறந்த துணை நடிகைகளுக்கான பிரிவில் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரையும் வீழ்த்திய ஜோ சல்டானா இந்த விருதை வென்றார். அப்போது மேடையில் கண்ணீர் மல்க பேசி அவர், இந்த மரியாதையால் நான் தளர்ந்துவிட்டேன். என் திறமையை அங்கீகரித்ததற்காக அகாடமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், என்னை பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி, நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பும், உங்களால் எனக்கு கிடைத்த பரிசை நான் மறக்கவே மாட்டேன். நடிகர்கள் மற்றும் எனது குழுவினர்களுடன் நான் இந்த விருதை பகிர்ந்து கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
