NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!

3 hours ago
ARTICLE AD BOX
BAN VS NZ

ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

விளையாடவுள்ள வீரர்கள் : 

நியூசிலாந்து :வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம்(w), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(c), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்

பங்களாதேஷ்: தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(சி), மெஹிதி ஹசன் மிராஸ், தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம்(வ), மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தாபிசுர் ரஹ்மான்

டாஸ் வென்ற பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டனும், முக்கிய பந்துவீச்சாளரான மிட்செல் சாண்ட்னர் “இந்த பிட்ச் அருமையாக இருக்கும் என நினைக்கிறேன். நாங்கள் வெவ்வேறு மைதானங்களில் நிறைய பயிற்சி செய்தோம், ஆனால் இங்கே சிறிது பனி இருக்கலாம். இருப்பினும் பந்துவீச்சிக்கு நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் ஷான்டோ ” கடைசியாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடினோம். அந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஒரு விதமான தைரியம் அந்த போட்டியில் இருந்து கிடைத்துள்ளது. இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்வோம்” எனவும் நஜ்முல் ஷான்டோ தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article