ARTICLE AD BOX
லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் லாகூரில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் டாஸ் வென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூஸிலாந்து அணி கேப்டன் மிட்செல் ஷார்ட்நர், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் முடிவு எடுத்திருக்கின்றோம்."

"ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கின்றேன். கொஞ்சம் காய்ந்த நிலையிலும் ஆடுகளம் இருக்கின்றது. கேப்டனாக எனது அணியை நாக் அவுட் சுற்றுக்கு தலைமை தாங்குவது என்பது பெருமையாக நினைக்கின்றேன். நாங்கள் நல்லவிதமான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றோம்."
"இந்தியாவுக்கு எதிராக எந்த வீரர்கள் களமிறங்கினமோ அதே அணி தான் இன்றைய போட்டியிலும் விளையாடுகிறது. துபாய் ஆடுகளம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால் லாகூர் ஆடுகளம் எங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. இங்கே தான் முத்தரப்பு போட்டியிலும் விளையாடினோம். எனவே இன்றைய ஆட்டத்தில் மீண்டும் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்வோம் என்ற சாட்னர் கூறினார்."
இதை தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா, "டாஸ் வென்று நான் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் பேட்டிங் தேர்வு செய்திருப்பேன். தற்போது பவுலர்கள் தங்களுடைய பணியை சரியாக செய்ய வேண்டும். அதன் பிறகு என்னுடைய பேட்ஸ்மேன்கள் இலக்கை சேஸ் செய்ய வேண்டும்."
"அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் நாங்கள் நிறைய பாடங்களை கற்று இருக்கிறோம். இது போன்ற போட்டிகளில் முக்கிய தருணங்களில் வெற்றி பெற வேண்டும். கடும் பயிற்சி மற்றும் நம்பிக்கை கொண்டு இந்த போட்டியில் களமிறங்குகிறோம். அரையிறுதியாக இருந்தாலும் இதை நாங்கள் ஒரு சாதாரண போட்டி போல் தான் எடுத்துக் கொள்வோம் என்று தென்னாப்பிரிக்கா கேப்டன் கூறினார். அரையிறுதி போட்டி நடைபெறும் லாகூர் மைதானத்தில் ரசிகர்கள் ஒருவரும் மைதானத்திற்கு வராதது இதனை கேப்டன்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.இதனால் இது ஒரு அரை இறுதி போட்டி போலவே தெரியவில்லை."