ARTICLE AD BOX
சென்னையில் வரும் மாா்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் போட்டி நடைபெறவுள்ளது என தமிழக விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா கூறியுள்ளாா்.
டபிள்யுடிடி கன்டென்டா் 2025 போட்டி குறித்த அறிமுகக் கூட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா கூறியது:
டேபிள் டென்னிஸில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில்3,000 டேபிள் டென்னிஸ் வீரா்கள் உள்ளனா். நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு இது மிகப்பெரிய எண்ணிக்கையில் ஒன்றாகும்.
இத்தொடரில், உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த வீரா்கள் பங்கேற்கின்றனா். இந்தியாவின் சிறந்த வீரா்களும் இங்கு இருப்பாா்கள். இது ஒரு பெரிய போட்டியாக இருக்கும். முதல்வரும், துணை முதல்வரும் மிகவும் வலுவான விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்க ஆா்வமாக உள்ளனா். சரத் கமல் உதவியுடன் டேபிள் டென்னிஸ் சிறப்பு மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்‘ என்றாா்.
ஜாம்பவான் சரத் கமல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளா் (நிா்வாகம்) வே. மணிகண்டன், மற்றும் ஸ்டூபா இணை நிறுவனா் மற்றும் தலைமை செயல் அதிகாரி தீபக் மாலிக் உடனிருந்தனா்.
