ARTICLE AD BOX
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள டாப் 10 அரசு மருத்துவ கல்லூரிகளில் கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் (NEET UG) தகுதி பெற வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 23 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற கடும் போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், டாப் 10 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு (2024) கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக பயாலஜி நீட் வியூ என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின் படி
சென்னை மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 695, பி.சி – 686, பி.சி.எம் – 685, எம்.பி.சி – 680, எஸ்.சி – 642, எஸ்.சி.ஏ – 599, எஸ்.டி – 621
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 681, பி.சி – 675, பி.சி.எம் – 672, எம்.பி.சி – 671, எஸ்.சி – 622, எஸ்.சி.ஏ – 561, எஸ்.டி – 594
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 675, பி.சி – 669, பி.சி.எம் – 665, எம்.பி.சி – 666, எஸ்.சி – 614, எஸ்.சி.ஏ – 555, எஸ்.டி – 570
மதுரை மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 675, பி.சி – 665, பி.சி.எம் – 660, எம்.பி.சி – 656, எஸ்.சி – 600, எஸ்.சி.ஏ – 552, எஸ்.டி - 559
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 670, பி.சி – 664, பி.சி.எம் – 655, எம்.பி.சி – 655, எஸ்.சி – 593, எஸ்.சி.ஏ – 549, எஸ்.டி – 560
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 668, பி.சி – 655, பி.சி.எம் – 650, எம்.பி.சி – 651, எஸ்.சி – 569, எஸ்.சி.ஏ – 535, எஸ்.டி – 536
சேலம் மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 660, பி.சி – 652, பி.சி.எம் – 644, எம்.பி.சி – 646, எஸ்.சி – 581, எஸ்.சி.ஏ – 548, எஸ்.டி – 554
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 661, பி.சி – 655, பி.சி.எம் – 648, எம்.பி.சி – 650, எஸ்.சி – 580, எஸ்.சி.ஏ – 542, எஸ்.டி – 549
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 654, பி.சி – 645, பி.சி.எம் – 643, எம்.பி.சி – 640, எஸ்.சி – 570, எஸ்.சி.ஏ – 515, எஸ்.டி – 531
தேனி மருத்துவக் கல்லூரி
பொதுப் பிரிவு – 650, பி.சி – 643, பி.சி.எம் – 638, எம்.பி.சி – 631, எஸ்.சி – 564, எஸ்.சி.ஏ – 507, எஸ்.டி – 518