ARTICLE AD BOX
பொதுவாக வேப்பம் மரத்திலுள்ள குச்சிகள், இலைகள் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
கறைபடிந்த பற்களை கூட வென்மையாக மாற்றும் திறன் வேப்பம் குச்சிகளுக்கு உள்ளது.
வழக்கமாக நாம் பயன்படுத்தும் பற்பசைகள் எமது பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை முழுமையாக நீக்காது. ஆனால் தான் எமது முன்னோர்கள் இன்றும் வேம்பு குச்சிகளை பயன்படுத்துகிறார்கள்.
இவை கறைகள் நீக்குதல் மட்டும் அல்லாது பற்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
அந்த வகையில் வேம்பு குச்சிகளை தொடர்ந்து பயன்படுத்தும் ஒருவர் என்னென்ன நன்மைகளை அடைவார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வேப்பம் இலைகள் பயன்பாடு
1. பற்பசையால் பல் துலக்கிய பின்னரும் சிலருக்கு பற்களில் கறை அப்படியே இருக்கும். அப்படியான நேரங்களில் வேப்பம் இலைகள் அல்லது அதன் குச்சிகளால் துலக்கினால் கறைகளில் இல்லாமல் போகும்.
2. பற்களுக்கு வேப்பங்குச்சி பயன்படுத்தும் ஒருவரின் ஈறுகள் பலப்படும். அத்துடன் ஈறுகளில் இருக்கும் இரத்தப்போக்குகள் தவிர்க்கப்படும்.
3. ஆரோக்கியமான மற்றும் வலுவான ஈறுகள் உருவாகினால் பற்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கும்.
4. வாய் எளிதில் பாக்டீரியாவுக்கு பாதிக்கப்படும் உறுப்பாகும். இதனால் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் இருந்து பாக்டீரியாக்கள் தோன்றும். இவற்றை அழிக்கும் வேலையை வேப்பம் குச்சிகள் செய்கிறது.
5. வாய் வழி சுகாதாரம் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி வேப்பம் இலைகள் மற்றும் குச்சிகளை பயன்படுத்தலாம். இது அவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |