தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும், பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும் இன்று திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் தான் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்தப் படத்தில் தனுஷி அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், சரத்குமார், ஆடுகளம் நரைன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.

தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தனுஷ் படம் என்பதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் இந்தப் படத்திற்கு போட்டியாக இளம் நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான படம் தான் டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் பிரதீப் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

இந்த 2 படங்களுமே இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வந்தன. ரெண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. ஏனென்றால் பிரதீப் ரங்கநாதன் படத்தை பற்றி அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆதலால் தனுஷ் படத்தை விட டிராகன் படத்திற்கு நல்ல வரவேற்பு. அதுமட்டுமில்லை, அட்வான்ஸ் புக்கிங்கிலும் டிராகன் படம் அதிக வசூல் குவித்திருக்கிறது.

தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஃப்ரீபுக்கிங்கில் மட்டும் ரூ.50,76,000 வரையில் வசூல் குவித்தது. இதுவே டிராகன் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ.1,06,88,000 வரையில் வசூல் குவித்திருக்கிறது.
ப்ரீ புக்கிங்கிலேயே டிராகன் நல வசூல் குவித்த நிலையில் பாக்ஸ் ஆபிஸிலும் டிராகன் நல்ல வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து தெரிவிக்கும் sacnilk இணயதளம் இந்த இரு படங்களில் வசூல் குறித்து கனிந்துள்ள தகவலை வெளியிட்டுள்ளது. sacnilk கணிப்பின் படி முதல் நாளில் டிராகன் 6 கோடி வசூல் செய்யும் என கூறியுள்ளது. அதே போல் தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம், முதல் நாளில் 1.5 கோடி வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இதை பார்த்து தனுஷின் NEEK பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படத்தின் பாதி வசூலை கூட பெறவில்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.