ARTICLE AD BOX
Muthra Loan: முத்ரா கடன் திட்டம்! என்னென்ன ஆவணங்கள் தேவை! சொத்து பத்திரத்தை அடமானம் வைக்க வேண்டுமா?
சென்னை: முத்ரா லோன் யாருக்கு கிடைக்கும், இதற்கான ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். இந்த முத்ரா கடன் திட்டம் மூலம் ரூ 10 லட்சம் வரை கடன் பெறலாம். இது முற்றிலும் பெண்களுக்கானது ஆகும். அது போல் எந்தெந்த தொழில்களுக்கு கடன் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: முத்ரா லோன் யாருக்கு கிடைக்கும்? என்ன ஆவணம் தேவை?
பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டமானது , சிறுதொழில், குறுதொழில் செய்பவர்களை ஊக்குவிக்க அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில் சார்ந்த கடன் வழங்கும் திட்டம். இதில், 10 லட்ச ரூபாய் வரை கடன் வாங்க முடியும்.

முத்ரா கடனில் மூன்று வகைகள் உள்ளன.
1. சிஷூ - ரூபாய். 50,000 வரை
2. கிஷோர் - ரூபாய். 50,000 முதல் 5 லட்சம் வரை
3. தருண் - ரூபாய். 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை
முத்ரா கடன் யாருக்குக் கிடைக்கும் ?
இதனை எந்த ஒரு இந்தியரும் பெற முடியும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு தாக்கல் செய்த , வருமான வரி படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும். தொழில்களின் பட்டியலை, முத்ரா இணையதளத்தில் காணலாம்.
எந்த ஒரு அடமானமும் தேவையில்லை. எனவே, எவரும் இதன் மூலம் பயன் பெற முடியும்.
முத்ரா கடன் வழங்கும் வங்கியினை அணுகி கடன் பெற முடியும்.
வயது 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முத்ரா கடன் சார்ந்த தகவல்களை பின்வரும் சுட்டியில் பெறலாம்.
https://mudra.org.in/Offerings
என்ன ஆவணம் தேவை?
கடவுச் சீட்டு புகைப்படம்
அடையாள அட்டை -ஆதார், ஓட்டுநர் உரிமை போன்றவை
முகவரி அட்டை - மின்சார கட்டண ரசீது, தொலைப்பேசி கட்டண ரசீது போன்றவை
விண்ணப்பம் - கடன் சார்ந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
இதர ஆவணங்கள் - தொழில் சார்ந்த இதர ஆவணங்கள்
இந்த ஆவணங்களை வங்கி சரிபார்த்து, கடன் வழங்கும். இந்தக் கடன்களுக்கு , வட்டி விகிதம் வங்கியால் முடிவு செய்யப்படும். பொதுவாக 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை காலவரையறை இருக்கும். இதனை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இந்தக் கடன்களுக்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது.
ஒருவேளை கடன் வாங்கியவர் கட்ட முடியாவிட்டால், அரசாங்கம் வங்கிக்கு அந்தக் கடனை அடைத்துவிடும். முத்ரா கடன் பெற வங்கிகளை அணுகலாம். உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கியில், முத்ரா கடன் குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
https://sbi.co.in/web/business/sme/sme-loans/pm-mudra-yojana
முத்ரா கடன் வழங்கும் திட்டத்தினை, சுயதொழில் செய்பவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடமானம் இல்லாமல், பெரிய தொகையை தொழிலுக்குத் தரும், அரசாங்கத்தின் அருமையான திட்டம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.