Baby (Photo Credit: Pixabay)

மார்ச் 06, மூணாறு (Kerala News): கேரள மாநிலம், இடுக்கி (Idukki) மாவட்டத்தில் சாந்தாம்பாறை அருகே பாறைதோடு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் வீரகிஷோர். இவரது மனைவி மருத்துவர் விஜயலெட்சுமி (வயது 29), உடும்பன்சோலை குடும்ப சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான விஜயலெட்சுமியை பிரசவத்திற்காக நெடுங்கண்டம் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் (மார்ச் 04) பிரசவத்திற்கான அறுவை சிகிச்சை நடந்தது. இந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது. Telangana Shocker: காதல் விவகாரம்; காதலியின் தாயைக் கொல்ல முயன்ற காதலன்.. அதிர்ச்சி செயல்..!

பெண் மருத்துவர் பலி:

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு விஜயலெட்சுமியின் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது. அவரை, தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.