பாலிவுட்டிலிருந்து விலகிய அனுராக் காஷ்யப்!

3 hours ago
ARTICLE AD BOX

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் ஹிந்தி சினிமாவிலிருந்து விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தி சினிமாக்களில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநரில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.

இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றன. தற்போது, நடிகராகவும் பலமொழிகளில் நடித்து வருகிறார். இறுதியாகத் தமிழில் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிக்க: அனாவசியமான கேள்வியைக் கேட்கலாமா? கோபமான இளையராஜா!

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன் பாலிவுட் சினிமாக்கள் ரூ. 1000 கோடியை ஈட்ட வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டு வருவதால் அவை நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், பாலிவுட் சினிமா மற்றும் மும்பையிலிருந்து விலகுவதாக அனுராக் காஷ்யப் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, அவர் பெங்களூருவில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளாகவும் கூறப்படுகிறது.

Read Entire Article