இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பல சாதனைகளை முறியடித்துள்ளார் .

இந்தியா vs வங்கதேசம்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவின் 2வது லீக் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின, இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி முதல் பேட்டிங் செய்து 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 229 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சுப்மன் கில்லின் அபார சதத்தால் இந்திய அணி 46.3 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

வங்கதேச அணிக்கு எதிராக இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். நேற்றை போட்டியில் அவர் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க:உண்மையானது வதந்தி! விவாகரத்து பெற்றனர் சாஹல்-தனஸ்ரீ ஜோடி.. அதிர்ச்சி கிரிக்கெட் உலகம்

அதிவேக 200 விக்கெட்டுகள்:

ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், களமிறங்கிய முகமது ஷமி அணிக்காக தனது வேலையை கனகச்சிதமாக செய்தார். இந்த போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரரானர் முகமது ஷமி. உலகளவில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்கிற சிறப்பையும் பெற்றார்.

வீரர் பெயர்

நாடு

போட்டிகள்

மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலியா

102

சக்லைன் முஷ்டாக்

பாகிஸ்தான்

104

முகமது ஷமி

இந்தியா

104

டிரென்ட் போல்ட்

நியூசிலாந்து

107

பிரட் லீ

ஆஸ்திரேலியா

112

ஆலன் டொனால்ட்

தென்னாப்பிரிக்கா

117

வக்கார் யூனிஸ்

பாகிஸ்தான்

118

ஷேன் வார்ன்

ஆஸ்திரேலியா

125

மகாயா நிடினி

தென்னாப்பிரிக்கா

126

லசித் மலிங்கா

இலங்கை

127

ஷமி படைத்த சாதனைகள்:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பிறகு 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார். மேலும், ஐசிசி போட்டிகளில் 60 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் முகமது ஷமி தற்போது படைத்துள்ளார்.

இதையும் படிங்க: Rohit Sharma: "Sorry" மைதானத்திலே மன்னிப்பு கேட்ட ரோகித் சர்மா - நடந்தது என்ன?

ஐசிசி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள்:

60 - முகமது ஷமி

59 - ஜாகீர் கான்

47 - ஜவகல் ஸ்ரீநாத்

43 - ரவீந்திர ஜடேஜா

42 - ஜஸ்பிரித் பும்ரா, அனில் கும்ப்ளே

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கான சிறந்த பந்துவீச்சு

5/36 - ரவீந்திர ஜடேஜா vs வெஸ்ட் இண்டீஸ், தி ஓவல் (2013)

5/53 - முகமது ஷமி vs வங்கதேசம், துபாய் (2025)

4/38 - சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா, டாக்கா (1998)

4/45 - ஜாகீர் கான் vs ஜிம்பாப்வே, கொழும்பு RPS (2000)