ARTICLE AD BOX
Mia Khalifa: கிம் கர்தாஷியனை கிழித்தெடுத்த மியா கலிஃபா.. பெரிய பிரச்னைதான் போல.. சரியான சண்டை
லண்டன்: திரையுலகில் மட்டும் இல்லாமல் எல்லா துறைகளிலும் போட்டிகளும் சவால்களும் பல உள்ளது. சிலர் தாங்கள் வளர வேண்டும், உச்சத்தில் வலம் வரவேண்டும் என மற்றவர்களை காலி செய்ய அதாவது, அவர்களது வாய்ப்பினைத் தட்டிப் பறிக்க அல்லது அவர்களுக்கு வாய்ப்புகளே வராத வகையில் பல உள்ளடி வேலைகளைப் பார்ப்பார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையில் பனிப்போர் என்பது இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் பல நாட்களாக மியா கலிஃபாவிற்கும் கிம் கர்தாஷியனுக்கும் இடையில் இருந்த பனிப்போர் இப்போது வெளியே வந்துள்ளது.
மியா கலிஃபாவைப் பொறுத்தவரை பலருக்கும் தெரிந்த முகம் எனக் கூறலாம். ப்ளூ ஃபிலிம்களில் நடித்து உலக அளவில் புகழ்பெற்ற ப்ளூ பிலிம் நடிகையாக மியா கலிஃபா இப்போதும் உள்ளார். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உலகம் முழுவதும் உள்ளார்கள். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 26.3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அதேபோல், எக்ஸ் பக்கத்தில் கிட்டத்தட்ட 6.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.

இப்படியான நிலையில் மியா கலிஃபா தற்போது மாடலிங்கில் செம பிஸியாக உள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுழைந்தாலே, பல வகையான மாடர்ன் உடைகள் விளம்பரங்களுக்காக அவர் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து புரோமோட் செய்து வருகிறார். இதில் இவருக்கு மாதத்திற்கு பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக கிடைக்கிறது. இது மட்டும் இல்லாமல், அவர் நேரடியாக, மாடலிங்கில் கலந்து கொண்டு, பேஷன் ஷோவில் செம பிஸியானவராக உள்ளார்.

மியா கலிஃபா: இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் உலகப் புகழ்பெற்ற நடிகையான கிம் கர்தாஷியன் குறித்து காட்டமான விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, 'கிம் கர்தாஷியன் ஒரு நாஜி மூளை கொண்ட கோடீஸ்வரப் பறவை , நான் இப்படிக் கூறுவதை கிம் கர்தாஷியன் படித்தால், அவள் கோடீஸ்வரி என்று அழைக்கப்படுவதைப் பார்த்து சந்தோஷத்தில் சிரிப்பாள், ஆனால் மற்ற விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பாள், ஏனென்றால் அவள் ஒரு பறவை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிம் கர்தாஷியன்: மியா கலிஃபா இவ்வாறு தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவார் என யாரும் நினைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர் மிகவும் வெளிப்படையாக கிம் கர்தாஷியன் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதால், பலரும் இது பெரிய பிரச்னையாக வெடிக்கும் எனக் கூறி வருகிறார்கள். மியா இப்படி விமர்சிப்பதற்கு முக்கிய காரணமே, பெர்ஃபெக்ட் இதழுக்கான அட்டைப் படத்தில் டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோ மற்றும் சைபர் ட்ரக்குடன் கிம் கர்தாஷியன் போஸ் கொடுத்தார். அதனால்தான் மியா இப்படி விமர்சித்துள்ளார் என பலரும் கூறுகிறார்கள்.
ரசிகர்கள்: மேலும் மியாவின் இந்த பதிவுக்கு கிம் கர்தாஷியனின் ரசிகர்கள் மியா கலிஃபாவை கடுமையாக விமர்சித்து கிம் கர்தாஷுயனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார். இது மட்டும் இல்லாமல், மியா கலிஃபாவின் ரசிகர்கள் கிம் கர்தாஷியன் மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களையும் விளாசி வருகிறார்கள். எது எப்படியோ சர்வதேச அளவில் பெண் பிரபலங்களுக்கு இடையில் பெரிய பிரச்னை எழ உள்ளதால், மொத்த உலகமும் அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் தொடங்கி நடவடிக்கைகள் வரை அனைத்தையும் கவனித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இது தொடர்பாக கிம் எதுவும் தெரிவிக்கவில்லை.
