ARTICLE AD BOX

திருவனந்தபுரம்,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
'எம்புரான்' திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், அத்திரைப்படம் வெற்றி பெற வேண்டி மோகன்லால் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். மேலும், 'முகமது குட்டி' என்ற மம்முட்டியின் இயற்பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளார்.�
முன்னதாக மம்முட்டிக்கு உடல்நிலை சரியில்லையென தகவல் பரவிய நிலையில், அது வதந்தியென மம்முட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.