MahaKumbh 2025: ``பிரயாக்ராஜ் ஆறு குளிப்பதற்கு ஏற்றதல்ல..'' - CPCB அறிக்கை சொல்வதென்ன?

1 week ago
ARTICLE AD BOX

மகாகும்பமேளா (MahaKumbh Mela 2025) நடைபெற்றுவரும் பிரயாக்ராஜில் கங்கா-யமுனா நதிகள் இணையும் சங்கமத்தில் உள்ள நீர் மாசு அதிகரிப்பால் அடிப்படையாக குளிப்பதற்கான அளவு கூட தூய்மையாக இல்லை எனத் தெரியவந்துள்ளது.

அந்த தண்ணீரில் மல மாசுபாட்டால் அதிகரிக்கும் கோலிஃபார்ம் (faecal coliform) பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதாக மத்திய மாடு கட்டுப்பாட்டு வாரியம் ( Central Pollution Control Board (CPCB)) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (National Green Tribunal (NGT)) கூறியுள்ளது.

CPCB -ன் பிப்ரவரி 3 தேதியிட்ட அறிக்கை கூறுவதன்படி, பிரக்யராஜில் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் மல கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் அனுமதிக்கப்பட்ட 100 மி.லிட்டருக்கு 2500 யூனிட் என்பதை விட அதிகமாக உள்ளது. இது மிகவும் மோசமான மாசுபாட்டைக் குறிப்பிடுகிறது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நிபுணர் உறுப்பினர் A.செந்தில் வேல் ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த அறிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டது.

நீரின் தரம் குளிப்பதற்கு உகந்ததாக இருப்பதை உறுதி செய்ய, ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் முயற்சிகளை பசுமை தீர்ப்பாயம் ஆராய்கிறது.

MahaKumbh
BJP: "உபா சட்டம் முதல் விகடன் இணையதள முடக்கம் வரை... பாஜக ஆட்சியின் ஒடுக்குமுறை" - தமுஎகச கண்டனம்

வழிமுறைகளை பின்பற்ற தவறினார்களா?

தீர்ப்பாயம், உத்தரபிரதேசம் மாநில மாடு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) முந்தைய உத்தரவுகளுக்கு இணங்கி செயல்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

வழிமுறைகளை மீறியது குறித்து கவலைத் தெரிவித்த NGT, UPPCB செயலாளர் மற்றும் பிரயாக்ராஜில் நீர் தரத்தை பராமரிக்கும் பொறுப்புள்ள பிற மாநில அதிகாரிகளை பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் மெய்நிகர் முறையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரக்யராஜ் ஆறுகளில் சுத்தத்தைப் பராமரிக்கும் விதமாக பல மாவட்டங்களில். கழிவுநீரை ஆற்றில் கலக்கும் தொழிற்சாலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன, நவீன தூய்மை உபகரணங்களுடன் தூய்மைப்பணிகள் நடைபெற்றன.

MahaKumbh

மகா கும்பமேளாவுக்கான 7000 கோடி பட்ஜெட்டில் 1600 கோடி நீர் மற்றும் கழிவு மேலாண்மைக்காக ஒதுக்கப்பட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் மேம்பட்ட மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்டது.

கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா 45 நாள்கள் நடைபெறும். மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தினசரி நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்வதாகவும் மாசுபாட்டைக் கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Travel for Nature Lover: தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய 7 முக்கிய சுற்றுலாத் தலங்கள்..!
Read Entire Article