ARTICLE AD BOX

சென்னை : மகாராஷ்டிரா மாநிலம்நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதங்களாக தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்ப உள்ளதை நேரலை செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது. வில்லியம்ஸும் வில்மோரும் டிராகன் விண்கலத்திற்குள் நுழைந்துவிட்டனர், இறுதியாக ஹட்ச் மூடப்பட்டுவிட்டது. நான்கு டிராகன் குழுவினரும் இப்போது காப்ஸ்யூலுக்குள் உள்ளனர். சரியாக காலை 10:35 மணிக்கு டிராகன் விண்கலம் பூமியை நோக்கி புறப்பட தொடங்கும்.