ARTICLE AD BOX
KTM 390 அட்வென்ச்சர் அதன் பிரிவில் மிகவும் ஆஃப்-ரோடு திறன் கொண்ட மிடில்வெயிட் சாகச பைக் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் ஆஸ்திரியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது.
KTM 390 Adventure 2025 – விலை, அம்சங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் மீது அதிக மோகம் கொண்டவர்களாக விளங்கி வருகின்றனர். ஏன் சொல்ல போனால், வாகனத்திற்காக உயிரை கூட மாய்த்து கொள்கிறார்கள். அந்த அளவுக்கு எப்படியாவது ஒரு சொந்த பைக் வாங்க வேண்டும் என்று நாட்டம் காட்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக உயர்தர பைக்கை வாங்க தான் ஆசை படுகிறார்கள். அப்படி இளைஞர்கள் ஆசைப்படும் வாகனத்தில் ஒன்று தான் KTM பைக். மற்ற பைக்குகளை காட்டிலும் அனைவரையும் கவரும் விதமாக KTM பைக் இருந்து வருகிறது. அதனால் தான் அதை வாங்க இளைஞர்கள் அலை மோதுகிறார்கள்.
அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் KTM நிறுவனம் புது புது வசதிகளை கொண்ட பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது KTM 390 அட்வென்ச்சர் வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?
KTM 390 Adventure 2025 அம்சங்கள்:
KTM 390 அட்வென்ச்சர் பைக்கில் 5 இன்ச் TFT டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இரட்டை-அடுக்கப்பட்ட LED ஹெட்லைட் உள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்பிலிட் டிரெல்லிஸ் பிரேமுக்குள் 46PS மற்றும் 39Nm உற்பத்தி செய்யும் 399cc ஒற்றை சிலிண்டர், திரவ-குளிரூட்டப்பட்ட புதிய மோட்டாரை பொருந்தியுள்ளது.
TFT டிஸ்ப்ளேவை உங்கள் ஸ்மார்ட் போனுடன் ப்ளூடூத் வழியாக இணைக்க முடியும், இது அழைப்பு & SMS எச்சரிக்கைகள், இசை கட்டுப்பாடு மற்றும் டர்ன்-பை-டர்ன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 21 அங்குல முன்பக்கமும் 17 அங்குல பின்புற டியூப்லெஸ் ஸ்போக் வீல் அமைப்பும் உள்ளன.
6-ஸ்பீடு கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும். இந்த பைக் ஷோ ரூமில் 3,41,877 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.
Bike News in Tamil பைக் நியூஸ்
2025ல் வரப்போகும் புதிய ஹீரோ.., பட்ஜெட் மற்றும் மைலேஜில் கலக்க வரும் Hero splendor 135!!
நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?., அதன் அறிகுறிகள் என்ன?
15000க்கு கீழ் Top 5 Best Smartphone! அப்புறம் என்ன உடனே ஆர்டர் போடுங்க மக்களே!!
The post KTM 390 Adventure 2025 – விலை, அம்சங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே! appeared first on SKSPREAD.