Kerala crime : போதையில் காதலி உட்பட 5 பேரை கொலை செய்த வாலிபர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!

1 day ago
ARTICLE AD BOX

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 23 வயது வாலிபர் அஃபான் என்பவர் ஐந்து பேரை வெட்டி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு. காதலி,  தனது சகோதரன், பெரியப்பா, பெரியம்மா மற்றும் பாட்டி ஆகியோர் கொலை. வெட்டப்பட்ட புற்று நோயாளியான தாயார் மருத்துவமனையில் அனுமதி.

திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் அஃபான். இவரது தந்தை வெளிநாட்டில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.  வெளி  ஊரான எஸ்.என்.புரம் பகுதியை சேர்ந்த பர்சானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார் அஃபான், இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு  காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

கொல்லம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படித்து வரும் பர்சானா டியூசனுக்கு செல்வதாக கூறி புறப்பட்டவர் வீடு திரும்பாத நிலையில் காதலனுடன் அவரது வீட்டிற்கு சென்றது பர்சானாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இந்நிலையில்   நேற்று  மாலை அஃபான்    தனது தந்தையின் தாய் என்பத்தி எட்டு வயதான சல்மா பீவியின் வீட்டிற்கு சென்று அவரை தலையில் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், தனது தந்தையின் அண்ணனான லத்தீப் என்பவரது வீட்டிற்குச் சென்று லத்தீப் மற்றும் அவரது மனைவி சஷாதிகா ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது வீட்டிற்கு திரும்பிய அஃபான் 14 வயதான தனது தம்பி அப்சான் புற்று நோயாளியான தாயார் ஷெமி, காதலி பர்சானா ஆகியோரை வெட்டியுள்ளார். தாயாரைத் தவிர தம்பியும், காதலியும் உயிரிழந்தனர். தாயார் படுகாயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கொலைக்கு பின் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர், ஆறு பேரை கொலை செய்ததாக கூறியுள்ளார்.  போதை மருந்துக்கு அடிமையான அஃபான் ஐந்து பேரை கொலை செய்த பின் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அஃபான் காவல் நிலையத்தில் சரணடைந்த போது ஆறு பேரை கொலை செய்ததாக கூறினாலும் தாயார் உயிர் பிழைத்ததால் 5 பேர் மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் போதைப் பொருளுக்கு அடிமையான அஃபான் அவ்வப்போது தனது தந்தையின் தாயார் சல்மா பிபி இடம் பணம் கேட்டு வந்ததாகவும், ஏற்கனவே பலமுறை பணம் கொடுத்த சல்மா பீவி தற்போது பணம் கேட்டபோது அளிக்கவில்லை என்பதோடு அவரது நகையை அடகு வைப்பதற்காக கேட்டபோது சல்மா பீவி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க; Crime : 10-ஆம் வகுப்பு மாணவயின் கழுத்தை அறுத்த 12 ஆம் வகுப்பு மாணவன்.. நடந்தது என்ன?

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்த ஆபார் சமீபகாலமாக பண நெருக்கடியில் காணப்பட்டதால் குடும்பத்தினர் பணம் வழங்க மறுத்ததால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் அதை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த கொலைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எலிமருந்து சாப்பிட்ட அஃபானை போலீசார் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஐந்து பேரை கொலை செய்த இளைஞன் தொடர்பான சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article