karthigai deepam serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி நடவடிக்கையை சந்திரகலா கவனித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பரமேஸ்வரியை கூப்பிடும் ராஜராஜன்:

அதாவது சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து மண்டபத்தில் நடந்த விஷயங்களை சொல்கிறாள். மறுபக்கம் கார்த்திக் ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் என மூவரும் ஒன்று கூடி இருக்க கார்த்தி டாக்டரிடம் உண்மையை சொல்லும்படி சொல்லி விட்டேன் என சொல்கிறான்.

அடுத்ததாக மயில்வாகனம் ராஜராஜனை கூப்பிட்டு நாம இதை இப்படியே விடக்கூடாது உண்மையை தெரியப்படுத்தவும் அது மட்டும் இல்லாமல் பரமேஸ்வரி பாட்டியையும் வர வையுங்கள் என்று சொல்ல, ராஜராஜன் அம்மாவுக்கு போன் போட்டு மண்டபத்திற்கு வர சொல்கிறார்.

தவறை உணரும் ரோகிணி:

அதனைத் தொடர்ந்து ரேவதி ரூமில் ரோகிணி நடந்த விஷயங்களை நினைத்து வருத்தமாக இருக்க அதை கவனித்த ரேவதி, இதெல்லாம் உன்னுடைய தப்புதான் அம்மா பேச்சை கேட்டுகிட்டு நீ எதுக்கு மாமாவோட சேர்ந்து வாழாமல் ஒதுங்கி இருக்க? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா தானே குழந்தை பிறக்கும் என்று எடுத்து சொல்ல ரோகிணி தனது தவறை உணர்கிறாள்.

மண்டபத்திற்கு வரும் கார்த்தியின் அண்ணன்கள்:

அடுத்ததாக மயில்வாகனத்தை சந்தித்து நாம் இரண்டு பேரும் ஹனிமூன் போகலாம் என்று பேச இருவருக்கும் இடையேயான காதல் பயணம் தொடங்குகிறது. பிறகு பரமேஸ்வரி பாட்டி கார்த்தியின் இரண்டு அண்ணன்களான அருண் மற்றும் ஆனந்துடன் மண்டபத்திற்குள் வருகிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.