<p>நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் காளியம்மாள். சமீபகாலமாக இவரின் செயலபாடுகள் இவர் கட்சியில் இருந்து விலக உள்ளதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். </p>
<p>நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள காளியம்மாள் அடுத்து எந்த கட்சியில் இணைய உள்ளார்? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>