ARTICLE AD BOX
பொதுவாக நமது மனதில் ஏதாவது மனக்குழப்பத்தில் அல்லது துன்பத்தில் இருக்கும் பொழுது நம்மில் சிலர் பாடல் அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம்.
அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும்.
அப்படி உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பத்தை மறந்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
கடி ஜோக்ஸ்
நண்பன் 1: தானத்தில் பெரிய தானம் எது? |
நண்பன் 2 : மைதானம் தான். |
நண்பன் 1: கிரிக்கெட் மேட்ச் பார்த்துகிட்ட ஒரு கொசு திடீரென்று செத்துப் போச்சாம் ஏன்? |
நண்பன் 2 : ஏன்னா இந்திய ஆல் அவுட் ஆயிடுச்சாம். |
நண்பன் 1: ஸ்கூல்ல எக்ஸாம் அன்னைக்கு எல்லாரும் கலர் டிரஸ் போட்டு போனாங்களாம் ஏன்? |
நண்பன் 2 : ஏன்னா அது மாடல் Exam |
நண்பன் 1: இரண்டு வீரர்கள் கத்தி சண்டை போட்டால் என்ன ஆகும்? |
நண்பன் 2 : தொண்டை கட்டி வலிக்கும் |
நண்பன் 1: ஒரு அம்மா சர்க்கரை பாக்ஸ்-ல உப்புன்னு எழுதி வெச்சாங்க. ஏன்? |
நண்பன் 2 : எறும்பை ஏமாத்தறதுக்குத்தான் |
நண்பன் 1: தண்ணியில் இருந்து ஏன் மின்சாரம் எடுக்குறாங்க? |
நண்பன் 2 : அப்படி எடுக்கல்லன்னா குளிக்கும்போது ஷாக் அடிச்சிரும்ல அதான். |
மகன் : அப்பா ஸ்கூல்ல ராமு அடிச்சிட்டான்பா |
அப்பா : வாதியார்கிட்டே சொல்லவேண்டியதுதானே மகன் : அப்பா ராமுங்கிறதே வாத்தியார்தான்பா |
நண்பன் 1: ஒருத்தன் வேகமா வண்டியில போனானாம். ஆனால் தீடிர்னு பிரேக் போட்டானான். |
நண்பன் 2 : ஏன்??
நண்பன் 1: ஏன்னா அவன் வீடு வந்துருச்சாம் அதான் பிரேக் போட்டாணாம். |
நண்பன் 1:ஒருத்தன் பொண்டாட்டி சமையல வாயில வைக்க முடியலன்னு பேங்க் மேனேஜர் கிட்ட போய் சொன்னாலும் ஏன்? |
நண்பன் 2 : ஏன்னா நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்களாம். |
நண்பன் 1: ஒரு அம்மா எப்போதும் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிட்டு தான் தூங்குமாம் ஏன்? |
நண்பன் 2 : அப்பதான் தூக்கத்தில் வரும் கனவு தெளிவா தெரியுமாம். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |