Kadi Jokes: ஒரு நிமிடம் வயிறு குலுங்க சிரிக்கணுமா? இந்த ஜோக்ஸ் படிங்க

1 day ago
ARTICLE AD BOX

பொதுவாக நமது மனதில் ஏதாவது மனக்குழப்பத்தில் அல்லது துன்பத்தில் இருக்கும் பொழுது நம்மில் சிலர் பாடல் அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம்.

அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும்.

அப்படி உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பத்தை மறந்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

   கடி ஜோக்ஸ்

கிளி ஏன் பச்சயா இருக்கு தெரியுமா?
ஏன்னா, அது அத யாரும் வேகவெக்கல அதான்,
ஒரு அம்மா சுட்டுவெச்ச தோச மேல ஒருத்தன் வந்து உக்காந்தானாம், ஏன்?
ஏன்னா, அது தி(ண்)ணை தோசையாம்,
பெயின்ட் ஏன் அழுகுது?
ஏன்னா, நாமதான் பெயின்ட்ட அடிக்கிறோம்ல
கல்யாணத்துக்கு 101 ரூபாய் மொய் ஏன் வெக்கிறாங்கன்னு தெரியுமா?
ஏன்னா, அந்த ஒரு ரூபாய் வெக்கலைன்னா 100 ரூபாய் நோட்டு பறந்துரும்ல, அதான். 
எல்லா பையையும் பிடிக்க முடியும். ஆனா ஒரு பைய மட்டும் பிடிக்க முடியாது. அது எந்த பை?
வேற எது தொப்பை தான். 
ரஜினி ரசிகர்களுக்கு ஊசி போட்டா என்ன சொல்வாங்கன்னு தெரியுமா?
என் வலி தனி வலின்னுதான், வேற என்ன? 
கத்தாடி ஏன் சுத்துது?
ஏன்னா, அதுக்கு அட்ரஸ் தெரியாதாம்,
இந்தியாவில் ரொம்ப கவலையான மாநிலம் எது?
ஒரி சா, ஏன்னா அதுலதான் ஒரி இருந்துகிட்டே இருக்குல்ல,
காபி ரொம்ப ஸ்ட்ராங்க இருக்க என்ன போடணும்?
ஒரு ஸ்பூன் சிமெண்ட் போடனும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        



Read Entire Article