ARTICLE AD BOX
Jio சிம் இருக்கா? 90 நாட்கள் JioHotstar இலவசம்.. 100GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்!
ஜியோ (Jio) நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு இதைவிட என்ன வேண்டும் என்று சொல்லும்படி கிடைத்த ஒரு திட்டத்தில் இலவச சலுகையாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கிடைக்கிறது. ஏற்கனவே, நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) கிடைக்கும் இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Jio Postpaid Plan) முழு சலுகைகளை தெரிந்து கொள்வோம்.
ஜியோ ரூ 749 ஃபேமிலி திட்டம் (Jio Rs 749 Family Plan): இந்த போஸ்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி மட்டுமல்லாமல், ஃபேமிலி சிம் கார்டை ஆட் செய்து கொள்ளும் சலுகை கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு கூடுதல் சிம் கார்டுகளை இணைத்து கொள்ளலாம். அந்த சிம் கார்டுகளுக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகை கிடைக்கும்.

முதலில் பிரைமரி சிம் கார்டுக்கு என்னென்ன சலுகைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தை பெறும் போஸ்ட்பெய்ட் கஸ்டமருக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. இதுபோக திட்டத்துக்கு மட்டுமே 100 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த 100 ஜிபி டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடையாது, 1 ஜிபிக்கு ரூ.10 செலுத்த வேண்டும்.
ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைப்பதை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது. இதுபோக ஓடிடி சந்தாவை பயன்படுத்தலாம். நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தாவும், அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தாவும் கிடைக்கிறது. இப்போது, ஜியோஹாட்ஸ்டார் சந்தா இணைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் 2025 தொடரை முன்னிட்டு இலவசமாக இந்த சந்தாவை கொடுக்கிறது. அதுவும் 90 நாட்களுக்கு கொடுக்கிறது. இருப்பினும், இந்த சந்தாவானது மார்ச் 22ஆம் தேதி மட்டுமே ஆக்டிவ் செய்யப்படும். ஏனென்றால், ஐபிஎல் போட்டிகள் அப்போதுதான் தொடங்கப்படுகிறது. ஆகவே, அந்த தேதியில் இருந்து 90 நாட்களுக்கு சந்தா கணக்கில் எடுக்கப்படும்.
இதுவொரு ஒன்-டைம் சலுகை (One-time Offer) என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஒரு முறை மட்டுமே ஜியோஹாஸ்டார் சந்தாவை இலவசமாக பெற முடியும். அதற்கு பிறகு கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும்படி ஒரு மாதம் மட்டுமே வேலிட்டி கிடைக்கிறது. ஆகவே, 90 நாட்கள் ஹாட்ஸ்டார் பெற ரீசார்ஜ் வேண்டும்.
அதாவது, இந்த போஸ்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடிவதற்குள் பில்லை கிளியர் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, அடுத்த மாதத்துக்கு தொடர்ந்து ஜியோஹாட்ஸ்டார் பயன்படுத்த முடியும். பில்லை கிளியர் செய்யாமல் விட்டால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் போகும். இந்த வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ், ஓடிடி போக கூடுதல் சலுகை வருகிறது.
ஆகவே, 50 ஜிபிக்கான ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சலுகை கிடைக்கிறது. இதுவரையில் பார்த்த சலுகைகள் பிரைமரி சிம் கார்டுக்கு கிடைக்கிறது. இதற்கு மேல் ஃபேமிலி சிம் கார்டுகளுக்கு கிடைக்கும் சலுகைகளை பார்க்கலாம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கூடுதலாக இணைக்கும் சிம் கார்டுக்கு கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படும். இது பிரைமரி கட்டணத்துடன் சேர்ந்துவிடும்.
இப்படி இணைக்கப்படும் சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, வெறும் ரூ.150 செலவில் கூடுதலாக ஒரு சிம் கார்டை மாதம் முழுவதும் ஆக்டிவாக வைத்திருக்க முடியும். அதே நேரத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இது லாபம் தரக்கூடியாதகவே இருக்கிறது.