சாரே கொல மாஸ்.. சோனி கேமரா.. 7 வருட OS அப்டேட்.. OLED டிஸ்பிளே.. புதிய Google போன் அறிமுகம்.. எந்த மாடல்?

4 hours ago
ARTICLE AD BOX

சாரே கொல மாஸ்.. சோனி கேமரா.. 7 வருட OS அப்டேட்.. OLED டிஸ்பிளே.. புதிய Google போன் அறிமுகம்.. எந்த மாடல்?

Mobile
oi-Prakash S
| Published: Wednesday, March 19, 2025, 23:01 [IST]

கூகுள் (Google) நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 9ஏ அம்சங்கள் (Google Pixel 9a specifications): 6.3-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி எச்டிஆர் டிஸ்பிளே (FHD+ OLED HDR display) வசதியுடன் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (2700 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சாரே கொல மாஸ்.. சோனி கேமரா.. புதிய Google போன் அறிமுகம்..

கூகுள் டென்சர் ஜி4 சிப்செட் (Google Tensor G4 chipset) உடன் இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் வசதியும் இந்த போனில் (Titan M2 security chip) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 7 வருட ஒஎஸ் (OS) அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செக்யூரிட்டி (security) மற்றும் பிக்சல் டிராப் (Pixel Drop) அப்டேட்கள் இந்த புதிய போனுக்கு கிடைக்கும்.

48எம்பி சாம்சங் ஜிஎஸ்8 (Samsung GN8) பிரைமரி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்721 சென்சார்) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன். மேலும் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போனின் கேமராக்கள்.

அதேபோல் ஃபேஸ் அன்பிளர்(Face Unblu), மேஜிக் எடிட்டர் (Magic Editor), மேஜிக் ஏரேசர் (Magic Eraser), போன்ற கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி சோனி ஐஎம்எகஸ்712(Sony IMX712) கேமரா ஆதரவும் உள்ளது. குறிப்பாக இதன் செல்பி கேமரா உடனும் 4கே வீடியோ பதிவு செய்யலாம்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இந்த போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)வசதியும் உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), 2 மைக்ரோபோன்கள் (2 microphones) ஆதரவும் இந்த போனில் உள்ளன.

சாரே கொல மாஸ்.. சோனி கேமரா.. புதிய Google போன் அறிமுகம்..

5100mAh பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 9ஏ போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்ஏ, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 இ 802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் 6, ஜிபிஎஸ், என்எப்சி, க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), நாவிக் (NavIC) யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 9ஏ போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. அப்சிடியன் (Obsidian), போர்சிலைன் (Porcelain), ஐரிஸ் (Iris) மற்றும் பியோனி (Peony) நிறங்களில் இந்த புதிய போன் வாங்குவதற்கு கிடைக்கும். ஆனால் இந்த கூகுள் பிக்சல் 9ஏ போன் இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்றும், பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Google Pixel 9a launched in India: check specification, price
Read Entire Article