Israel Airstrikes on Gaza (Photo Credit: @shorts_91 X)

மார்ச் 18, ஜெருசலேம் (World News): இஸ்ரேல் - காசா (Israel-Gaza War) இடையே கடந்த ஜனவரி 19ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால், இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சிரியா, லெபனான் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. Road Accident: சாலை விபத்து; 8 வயது சிறுவன் உட்பட மூவர் பலி..!

இஸ்ரேல் எச்சரிக்கை:

இதுகுறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. மீண்டும் போர் துவங்கி உள்ளது. போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஹமாஸ் படையினர் ஈடுபட்டதால் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளேன். பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த விதிமுறைகளை மீறி உள்ளது. கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தும் என அவர் கூறியுள்ளார்.