ARTICLE AD BOX

8 வது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 25ஆம் தேதி வரை முடிவடைகிறது. இதில் பங்கேற்கும் பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறையும், எதிர் பிரிவில் நான்கு அணிகளுடன் தலா ஒரு முறையும். ஒரு அணியுடன் மட்டும் இரண்டு முறையும் மோத வேண்டும். மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் தொடக்க லீக்கில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உடன் மோதுகிறது.
ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் சவாலை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக தொடங்குகிறது. இந்த ஆட்டம் மார்ச் 23ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இந்த முதல் போட்டியில் விளையாட மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு என்ன காரணம் என்னவென்றால்,” கடந்த சீசனில் மும்பை மூன்று முறை குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை.
முதல் மூன்று போட்டிகளில் கேப்டன் பாண்டியாவுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் தங்களுடைய கடைசி கட்டத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் மும்பை பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் இந்த சீசனில் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாது.