ARTICLE AD BOX
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் 10 அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் ஐதராபாத் அணியில் பேட்டிங்கை வலு சேர்க்கும் விதமாக இசான் கிஷனும் தற்போது அந்த அணிக்கு திரும்பி இருக்கிறார். இசான் கிசன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நிலையில் மும்பை அணியும் அவரை தக்க வைக்கவில்லை.

இந்த சூழலில் இசான் கிஷன், 11 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருக்கிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்குள் இடையிலான பயிற்சி ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் இரண்டு அணியிலுமே விளையாடினார்கள். முதல் இன்னிங்ஸில் விளையாடிய இசான் கிஷன் 23 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இசான் கிஷன் 30 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரரான அபிஷேக் ஷர்மா எட்டு பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி பயிற்சி ஆட்டத்தில் 260 ரன்கள் குவித்து இருக்கிறது.
ஹைதராபாத் ஆடுகளம் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த அம்மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர், ஹைதராபாத் ஆடுகளும் ரன் குவிப்புக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், இம்முறை 300 ரன்கள் அடிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 260 ரன்கள் குவித்து இருப்பது மூலம் இந்த சீசனில் என்ன மாதிரி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்பதை காட்டி இருக்கிறது.
இந்த சூழலில் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மாவே களமிறங்குவார்கள் என்றும் மூன்றாவது வீரராக இசான் கிஷன் விளையாட இருக்கிறார். மேலும் நடுவரிசையில் தென்னாப்பிரிக்கா வீரர் ஹென்றிச் கிளாசின், இளம் வீரர் அபிநவ் மனோகர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் விளையாடுகின்றனர்.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணியில் பேட்டிங் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று பவுலிங்கில் அந்த அணியில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ், இந்திய வீரர் முகமது சமி,ஜெய்தேவ் உனாட்கட், ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்களும் இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சில் அடம் சம்பா, ராகுல் சாகர் போன்ற வீரர்களும் உள்ளனர்.