ARTICLE AD BOX
IPL 2025 MI: ஐபிஎல் தொடர் (IPL 2025) வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகள் மோத இருக்கும் இந்த தொடர் மே மாதம் கடைசி வரை நடைபெற இருக்கிறது எனலாம். பல அணிகளும் பலமாக தோற்றமளிக்கிறது என்றாலும் அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியை சொல்லலாம்.
IPL 2025 MI: மீண்டு வருமா மும்பை இந்தியன்ஸ்?
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி கடந்த சீசனில் கடைசி இடத்தில் முடித்தது. பும்ரா (Jasprit Bumrah) இருந்தும் கூட அவர்களால் மீண்டு வர முடியவில்லை. கடந்தாண்டு தான் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிடம் இருந்து மும்பை டிரேட் செய்தது. பல வகையில் கடந்த சீசன் மோசமாக அமைந்தாலும் மெகா ஏலத்தின் மூலம் மும்பை தன்னை மெருகேற்றி இருக்கிறது.
IPL 2025 MI: மும்பையின் முரட்டு பேட்டிங்
ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) கேப்டனாக தொடர்வார் எனலாம். பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர் என இந்தியர்களும் ரியான் ரிக்கில்டன், வில் ஜோக்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ் என மிரட்டலான வீரர்கள் அணிவகுக்கிறார்கள்.
மேலும் படிக்க | சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை! காரணம் இது தான்!
IPL 2025 MI: ஆல்-ரவுண்டர்கள் நிரம்பிய மும்பை
இதில் ராஜ் அங்கத் பவா (Raj Angad Bawa), மிட்செல் சான்ட்னர், கார்பின் போஷ் உள்ளிட்டோரையும் நாம் சேர்க்கலாம். பாண்டியா, நமன் திர், வில் ஜாக்ஸ், சான்ட்னர், போஷ், ராஜ் அங்கத், ஏன் திலக் வர்மாவும் கூட பந்துவீசக்கூடியவர்கள் ஆவர். இதனால், ஆல்-ரவுண்டர்கள் நிரம்பிய அணியாகவே மும்பை இருக்கிறது.
IPL 2025 MI: சான்ட்னர் நிச்சயம், முஜீப் லட்சியம்
சுழற்பந்துவீச்சு என எடுக்கும்போது சான்ட்னர் மட்டுமின்றி முஜீப் உர் ரஹ்மானும் அணிக்குள் இருக்கிறார். இவர்கள் இருவரையும் பிளேயிங் லெவனில் விளையாடுவது கஷ்டம்தான். எனவே, கரன் சர்மா நிச்சயம் அணிக்குள் இருப்பார். இதேபோல், வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் இருவரும் சேர்ந்து விளையாடவும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது எனலாம். வில் ஜாக்ஸ் விளையாடவே அதிக வாய்ப்புள்ளது.
IPL 2025 MI: பும்ரா விளையாட மாட்டார்
வேகப்பந்துவீச்சில் போல்ட், தீபக் சஹார் விளையாடுவது உறுதி. பேக்அப்பிற்கு ரீஸ் டோப்ளியும் இருக்கிறார். தற்போதைய சூழலில் பும்ரா முதல் 3-4 போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதில் யார் விளையாட வைப்பது என்பது மும்பை அணிக்கு தலைவலியாக இருக்கலாம்.
IPL 2025 MI: பும்ராவுக்கு பதில் யார்?
அந்த வகையில் பும்ரா இல்லாததால் ராஜ் அங்கத் பவாவை அணியில் எடுக்கலாம். அவர் உங்களுக்கு பேட்டிங்கிலும் பெரியளவில் கைக்கொடுப்பார், பந்துவீச்சிலும் கைக்கொடுப்பார். பும்ரா இருந்தால் 8வது வீரர் வரை பிளேயிங் லெவனில் பேட்டிங் ஆப்ஷன் மும்பைக்கு கிடைப்பது குறைந்துவிடும். எனவே, அந்த குறையை இப்படி மும்பை போக்கிக் கொள்ளலாம்.
IPL 2025 MI: யார் யார் எந்தெந்த ஓவர்களை வீசுவார்கள்?
பவர்பிளே பௌலிங்கிற்கு போல்ட், தீபக் சஹார், ஹர்திக் பாண்டியா. மிடில் ஓவர்களில் சான்ட்னர், கரன் சர்மா, ராஜ் பவா, கார்பின் போஷ் இருக்கிறார்கள். டெத் ஓவர்களில் சான்ட்னரும் கைக்கொடுக்கலாம். போஷ், போல்ட், பாண்டியா இங்கும் கைக்கொடுக்கலாம். பும்ரா இல்லாதது டெத் ஓவர்களில் ஒரு குறையாக இருக்கும். முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்பதால் அவருக்கு பதில் நமன் திர் நேரடியாக களமிறக்கப்படலாம்.
IPL 2025 MI: மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவன்
ரோஹித் சர்மா - வில் ஜாக்ஸ்/ரியான் ரிக்கில்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ராபின் மின்ஸ், ராஜ் அங்கத் பவா, சான்ட்னர், கரன் சர்மா, போல்ட், தீபக் சஹார். இம்பாக்ட் பிளேயர்: நமன் திர், கார்பின் போஷ், முஜிப் உர்-ரஹ்மான்
மேலும் படிக்க | மும்பை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! முக்கிய வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ